இந்த வருடம் 2025 அட்சய திருதியை எப்பொழுது? தங்கம் வாங்க நல்ல நேரம் எது?
ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை சித்திரை மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு 3ஆவது நாளில் வரும் திருதியை திதியில் கொண்டாடப்படுவதாகும். இந்த நாள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த நாளில் சில முக்கியமான விஷயங்களை செய்வதால் நமக்கு பல் நன்மைகள் நடக்கிறது. அதாவது இந்த , நாளில் நாம் பிறருக்கு தானம் வழங்குதல், தங்கம் வாங்குவது, வீட்டு கிரகபிரவேசம் செய்வது என்பது நல்ல பலனை தரும்.
அந்த வகையில் இந்த வருடம் அட்சய திருதியை ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5.31 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி பிற்பகல் 2.12 மணிக்கு முடிகிறது. எனவே வழிபாடு செய்ய உகந்த நேரம் ஏப்ரல் 30ஆம் தேதி காலை 5.41 மணி முதல் 12.18 மணி வரை ஆகும்.
இந்த நாளில் செல்வம் பெறுக, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக மஹாலக்ஷ்மியையும், விஷ்ணு பகவானையும் வழிபாடு செய்வதால் நமக்கு மனதில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். மேலும், இந்த நாளில் நம்மால் முடிந்த தங்கம் வாங்குவது நமக்கு செல்ல செழிப்பை கொடுக்கும்.
அப்படியாக, அன்றைய நாளில் தங்கம் வாங்க உகந்த நேரமாகஏப்ரல் 30ஆம் தேதி காலை 5.41 மணி முதல் பிற்பகல் 2.12 மணி வரை உள்ளது. அது போல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலையே திருதியை பிறப்பதால் அன்றைய தினமும் தங்கம், வெள்ளி நகை வாங்கலாம்.
அன்றைய தினம் தங்கம் மட்டும் அல்லாமல் வெள்ளியும் வாங்கலாம். அவ்வாறு வாங்குவது நம்முடைய வாழ்க்கைக்கு நல்ல திருப்புமுனையாக அமையும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |