2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்பொழுது? முழு விவரங்கள் இதோ
ஜோதிட ரீதியாக கிரக நிகழ்வுகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2026 ஆண்டு முதல் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் எப்பொழுது? என்று பார்ப்போம். சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் செல்லும் பொழுது இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணம் ஒரு வளைய சூரிய கிரகணம் ஆகும்.
இந்த கிரகணத்தில் சூரியன் மட்டுமே நிழல் பகுதியில் வரும் வகையில் சந்திரன், சூரியனை மறைக்கிறது. இந்நிலையில் சூரியன் வளையல் போல் காட்சி அளிக்கும். இதை ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கிறார்கள். அந்த வகையில் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சூதக்காலம் கிரகணத்திற்கு 9 நேரத்திற்கு முன்பாக தொடங்கும்.

இந்த காலத்தில் பூமியின் வளிமண்டலம் மாசுபடுவதாகவும் அறிவியல் ரீதியாக நம்பப்படுகிறது. இவ்வாறு மாசு படும்பொழுது நிறைய தீய விளைவுகள் நடக்ககூடும் என்றும் அதை தவிர்க்க முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஜோதிடம் கூறுகிறது.
அதனால் இந்த காலகட்டங்களில் எந்த ஒரு சுப காரியங்களையும் செய்யக்கூடாது என்றும் கோவில் கதவுகள் கூட சூதக் காலத்திற்கு பிறகு மூடப்படுகிறது. அப்படியாக 2026 ஆம் ஆண்டில் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது.
இது தென்னாபிரிக்கா, தென் அர்ஜென்டினா மற்றும் அண்டாரிக்காவில் தெரியும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் இதனால் எந்த ஒரு ஆபத்தும் நமக்கு இல்லை. அதே போல் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சூரிய கிரகணம் நிகழ்ந்த 15 நாட்களுக்குப் பிறகு மார்ச் மூன்றாம் தேதி அன்று நிகழ்கிறது.

இது இந்தியாவில் முழுமையாக தெரியக்கூடிய கிரகணமாகவும் இதை நாம் நேரடியாக பார்க்கலாம். இந்த சந்திர கிரகணம் தோராயமாக 58 நிமிடங்கள் வரை நதொடரும். இந்த நேரத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் ரத்த நிலவு போல் காட்சி அளிக்கும். வானியல் படி இது 2029க்கு முந்தைய கடைசி முழு சந்திர கிரகணம் ஆகும்.
இந்த கிரகணம் அதாவது இந்தியாவில் இந்த சூதக்காலம் செல்லுபடியாகும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக நாம் இருக்க வேண்டும். அதோடு இரண்டாவது சூரிய கிரகணம் ஜூலை 29ஆம் தேதி அன்று நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகாவில் சில பகுதிகளில் தெரியும்.
அதேபோல் 2026 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று நிகழ்கிறது. இது இந்த ஆண்டு இரண்டாவது சந்திரகிரகணமாகும். இது வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவரை தெரியும். ஆனால் இந்தியாவில் தெரியாது இதனால் சூதகாலத்திலும் எந்த தாக்கத்தையும் இதை ஏற்படுத்தாது என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |