2026 சைத்ர நவராத்திரி: அதிர்ஷ்டம் சேர அன்று வாங்க வேண்டிய 5 பொருட்கள்
பங்குனி மாதம் வளர்பிறையில் அதாவது அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய பிரதமை திதியில் துவங்கி நவமி வரையிலான ஒன்பது நாட்களை அம்பிகையை வீட்டிற்கு அழைத்து பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. இதை தான் நாம் சைத்ர நவராத்திரி என்றும் வசந்த நவராத்திரி என்றும் கொண்டாடி வருகின்றோம்.
அதாவது சக்தியின் ஒன்பது வடிவங்களை போற்றி வழிபாடு செய்து அவளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு நமக்கு உரிய காலமாக இந்த நவராத்திரி காலம் இருக்கிறது. அப்படியாக இந்த 2026 ஆம் ஆண்டு சைத்ர நவராத்திரி எப்பொழுது? அன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
சைத்ர நவராத்திரி 2026 : சைத்ர நவராத்திரியை கொண்டாடுவதற்கு முன்பாக வீடுகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக 4 பொருட்களை நாம் சைத்ர நவராத்திரி முன்பாக வீட்டில் வாங்கி வைத்தால் நம்முடைய வீடுகளில் இருக்கக்கூடிய துன்பங்கள் விலகி அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் தேடிவரும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. சாஸ்திரங்களின் அடிப்படையில் "ஸ்ரீ யந்திரம்" மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. இது அம்பிகையின் இருப்பிடமாகவே கருதப்படுகிறது. அதனால் இதனை பூஜை அறையில் வைத்து அதற்கு பூஜை செய்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வீடுகளில் இருக்கக்கூடிய வறுமை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பது நம்பிக்கை.
2. மிகவும் மங்களமான பொருட்களாக கருதக்கூடிய வளையல்கள் குங்குமம், சிவப்பு நிற போட்டு, கண் மை போன்ற மங்களகரமான பொருட்களையும் நாம் நவராத்திரியின் பொழுது வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் வீடுகளில் மகிழ்ச்சி உண்டாகும். அதேபோல் இதை பெண்களுக்கு தானம் வழங்கும் பொழுதும் நமக்கு ஏற்படுகின்ற தோஷம் நீங்குகிறது.
3. நம்முடைய இந்து மதத்தில் தாமரை தெய்வீக மலராக கருதப்படுகிறது. மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய இருப்பிடமாகவும் வழங்குகிறது. அதனால் அன்றைய நாளில் நாம் தாமரையை வாங்கி வீடுகளில் வைக்கும் போது வாஸ்து குறைபாடுகள் நீங்கும் மன அமைதி கிடைக்கும்.
4. பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மயில் இறகை வீடுகளில் வாங்கி வைப்பது ராகு கேதுவால் ஏற்படுகின்ற தீய விளைவுகளை குறைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |