2026: சித்திரை அமாவாசை எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?
தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் இன்று வெகு சிறப்பாக பிறந்து மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜோதிடத்தில் தலைமை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலமாகும். அந்த வகையில், சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை சிறப்பு என்றாலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படியாக 2026 ஆம் ஆண்டு சித்திரை அமாவாசை எப்பொழுது? அன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்றும் சொல்வார்கள். சூரிய பகவான் இந்த மாதத்தில் உச்சம் பெறுகிறார். அதனால் சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பித்ரு கடன் மற்றும் திதி கொடுக்க மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை அமாவாசை பராபவ ஆண்டு பிறந்து மூன்றாவது நாளிலேயே வருகிறது. ஆனால் அடுத்த நாளிலும் திதி உள்ளது. அதாவது வியாழக்கிழமை ஏப்ரல் 16ஆம் தேதி மாலை 7.31 மணிக்கு அமாவாசை வருகிறது.
அதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 5. 47 மணிக்கு அமாவாசை முடிவடைகிறது. ஆதலால் சித்திரை அமாவாசை திதி கொடுக்க நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று திதி கொடுக்கலாம்.
வெள்ளிக்கிழமை மாலை வரை திதி உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சூரிய உதய நேரத்தில் திதி கொடுக்கலாம். ராகு காலம் 10.30 மணிக்கு தொடங்குவதால் இந்த நேரத்திற்குள் திதி கொடுப்பது உகந்ததாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |