2026: துர்காஷ்டமி எப்பொழுது? அக்டோபர் 18 வது 19 ஆ? பூஜை உகந்த நேரம் என்ன?
நவராத்திரி காலத்தில் சுக்ல பட்சத்தில் வரும் அஷ்டமி திதி அன்று துர்காஷ்டமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாள் துர்கா தேவியின் எட்டாவது வடிவமாக இருக்கக்கூடிய அன்னை மகா கௌரியை வழிபடுவதற்கு மிக உகந்த நாளாக இருக்கிறது.
அந்த வகையில், இந்த வருடம் துர்காஷ்டமி அக்டோபர் 18 அல்லது 19 எந்த நாள் என்று சில குழப்பம் இருப்பதால் அதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
துர்காஷ்டமி தேதியை சரியாக தீர்மானித்துக் கொள்வதற்கு முதலில் அஸ்வின் மாதத்தில் அஷ்டமி திதி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களை பஞ்சாங்கத்தில் சரி பார்க்க வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.27 மணிக்கு அஷ்டமி திதி துவங்குகிறது.

அன்று சூரிய உதயம் காலை 6.24 மணிக்கு நிகழ்கிறது. அதே வேளையில் அக்டோபர் 19ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.51 மணிக்கு அஷ்டமி திதி நிறைவடைகிறது. அன்றைய தினம் சூரிய உதயம் காலை 6.24 மணிக்கு நிகழ்கிறது.
அக்டோபர் 18ஆம் தேதி அன்று நாள் முழுவதும் அஷ்டமி திதி இருப்பதால் அன்றைய தினம் விரதம் இருப்பது சரி என்று சிலர் கருதலாம். ஆனால் உண்மையில் சூரியன் "உதய திதி" அடிப்படையில் அக்டோபர் 19ஆம் தேதி அன்று அஷ்டமி திதி அமைகிறது.
ஆதலால், அக்டோபர் 19 திங்கட்கிழமை அன்று துர்க்காஷ்டமி விரதத்தை இருப்பது நன்மையை பெற்றுக் கொடுக்கும். துர்க்காஷ்டமி விரதத்தின் பொழுது மூன்று சுபயோகங்கள் ஜோதிட ரீதியாக இணைகிறது. அவை திருதி யோகம், சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் ரவி யோகம் இணைகிறது.

இது மிகவும் மங்களகரமானதாகவும் நன்மை கொடுக்கக் கூடியதாகவும் பார்க்கப்படுகிறது. பழங்கால கதைகளின் படி மகிஷாசுரன் என்ற அரக்கன் அவனுடைய கொடுமை உலகில் உச்சத்தை அடைந்த போது தேவர்களின் ஒருங்கிணைந்த தேஜஸிலிருந்து தோன்றிய அன்னை துர்காஷ்டமி திதியில் அவதரித்தார்.
இந்த நாளில் அன்னை ஷாமுண்டா தேவியின் வடிவத்தை ஏற்று மகிஷாசுரனின் படையிலிருந்து சண்டன், முண்டன் மற்றும் ரக்தபீஜன் ஆகியவற்றை வதம் செய்தார். இந்த நாளில் விதிமுறைப்படி அன்னை மகா கௌரியை வழிபாடு செய்வதன் வழியாக நம்முடைய விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |