சனி பெயர்ச்சி எப்பொழுது? தேதியை அறிவித்த திருநள்ளாறு ஆலயம்
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். அப்படியாக, இந்த ஆண்டு2025 ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கம் ரீதியாக மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி ஆரம்பம் ஆனது. ஆனால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருக்கணித பஞ்சாங்க கணக்குப்படி சனி பெயர்ச்சி அடுத்த வருடம் 2026ல் தான் என்று அறிவித்திருந்தார்கள்.
அந்த வகையில் தற்பொழுது சனி பெயர்ச்சி எப்பொழுது நடக்க இருக்கிறது என்று தேதி அறிவித்திருக்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். திருக்கணித பஞ்சாங்கம் படி மார்ச் 29, சனி கும்ப ராசியிலிருந்து வெளியேறி, மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
30 வருடங்களுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். ஆனால் காரைக்கால் சனி பெயர்ச்சி இந்த ஆண்டு இல்லை என திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் அறிவித்து இருந்தாலும் மக்கள் மார்ச் 29 ஆம் தேதி சனீஸ்வரரை வழிபாடு செய்ய பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தார்கள்.
அன்றைக்கு தினசரி பூஜைபோலவே, சனிபகவானுக்கு நடைபெறும் அபிஷேகமும், வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது.
இந்நிலையில் காரைக்கால் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தின் சனிப்பெயர்ச்சி விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் தேதி காலை 8.24 மணிக்கு சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கின்றார் என்று திருநள்ளாறு கோவிலில் நடைபெற்ற பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், திருநள்ளாறு கோவில் பிரம்மோற்சவம் நிகழ்ச்சிகளாக அடுத்த மாதம் மே-23ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும், ஜுன்-06ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறும் என சிவாச்சாரியார்கள் அறிவித்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |