விபூதியை உடலில் எங்கு பூசலாம்? கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
விபூதி என்றால் ஐஸ்வர்யம், மகிமை என்று பொருள், இதனை அணிவதற்கு சில விதிமுறைகள் உண்டு.
காலையிலும், மாலையிலும். இரவு உறங்கச்செல்வதற்கு முன்பாகவும் விபூதி அணிந்து கொள்ளலாம்.
எங்கெங்கு தரிக்க வேண்டும்?
உச்சந்தலை
நெற்றி
மார்புப் பகுதி
தொப்புளுக்கு சற்று மேல்
இடது தோள்பட்டை
வலது தோள்பட்டை
இடது கை மற்றும் வலது கையின் நடுவில்
இடது மற்றும் வலது மணிக்கட்டு
இடது மற்றும் வலது இடுப்புப் பகுதி
இடது மற்றும் வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ் பகுதி
கழுத்து முழுவதும்
இரண்டு காதுகளின் பின்புறம் உள்ள குழி
விதிமுறைகள்
வலக்கையின் நடுவில் உள்ள மூன்று விரல்களால் எடுத்து தலையை நிமிர்த்தி கொண்டு கிழக்கு பார்த்தோ, வடக்கு திசை பார்த்தோ பூசிக்கொள்ள வேண்டும்.
நெற்றி முழுவதுமாக அல்லது மூன்று படுக்கை வசக்கோடுகளாக தரிக்க வேண்டும்.
ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதி பெறும் போது அவர்களை வணங்கி பெறுதல் வேண்டும், வெள்ளை நிற விபூதி மட்டுமே அணிய வேண்டும்.
கோவிலில் பிரசாதமாக வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும்.
அதனை ஒருதாளில் இட்டு நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும், ஒருவர் விபூதி தந்தால் வாங்க மறுப்பு தெரிவிக்ககூடாது.
பலன்கள்
மனதில் சங்கடங்கள், தீய எண்ணங்கள் விலகி இறைபக்தி அதிகரிக்கும்.
நல்ல குடும்பம், நல்ல உறவுகள் என நேர்மறையான ஆட்கள் உடனிருப்பார்கள்.
செல்வம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும், தீய செயல்களில் இருந்து காக்கப்படுவீர்கள்.