போகர் சித்தர் மீண்டும் மறுபிறவி எடுப்பாரா?

By Sakthi Raj Mar 07, 2025 12:03 PM GMT
Report

முருகப்பெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த தலமாக பழனி மலை இருக்கிறது.இங்கு வீற்றியிருக்கும் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தவர் போகர்.அதோடு பழனியில் போகர் சித்தர் இருக்கும் சமாதி அருகே ஒரு குகை இருக்கிறது.

அதன் வழியாக சென்றால் நேராக சென்றால் பழனி முருகனின் கருவறைக்கு நேராக செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படியாக,ஒரு நாள் போகர் அவருடைய சீடர்களை அழைத்து தான் ‘நிர்விகல்ப சமாதி’ அடையப் போவதாக தெரிவிக்கிறார்.(நிர்விகல்ப சமாதி என்றால், உடலை விட்டு பிரிந்து பஞ்சபூதத்துடன் கலப்பதாகும்).

போகர் சித்தர் மீண்டும் மறுபிறவி எடுப்பாரா? | When Will Pogar Siththar Reborn In This World

அவர் அந்த குகையின் வழியாக சென்று நிர்விகல்ப சமாதி அடைய போவதாக சொல்கிறார்.அதோடு அவர் தான் சமாதி அடைந்த பிறகு குகையின் வாசலை மூடி தான் பூஜித்து வந்த மரகத லிங்கம் மற்றும் புவனேஸ்வரி அம்மனையும் வைத்து பூஜை செய்து வாருங்கள் என்று கூறினார். 

சனி ராகு சேர்க்கையால் அடுத்த 3 மாதம் கவனமாக இருக்கவேண்டிய ராசிகள்

சனி ராகு சேர்க்கையால் அடுத்த 3 மாதம் கவனமாக இருக்கவேண்டிய ராசிகள்

அதுமட்டும் அல்லாமல் இந்த கோயிலின் பொறுப்பு அனைத்தையும் புலிப்பாணி சித்தரிடம் கொடுப்பதாகவும்,அதனை அவர்கள் வம்சாவளிகள் தொடர்ந்து பூஜை செய்வார்கள் என்று சொல்லிவிட்டு குகைக்குள் சென்று மறைந்து விட்டார்.

அதன் பிறகு போகர் சித்தர் யார் கண்ணுக்கும் தென்படவில்லை.பிறகு போகர் சித்தர் சொன்னது போல் சீடர்கள் குகையை மூடி அதன் முகப்பில் மரகத லிங்கத்தையும், புவனேஸ்வரி அம்மனையும் வைத்து பூஜித்து வருகின்றனர்.

போகர் சித்தர் மீண்டும் மறுபிறவி எடுப்பாரா? | When Will Pogar Siththar Reborn In This World

அந்த நிலையில்,போகர் அவருடைய புத்தகமான 'சந்திர ரேகை'யில் போகர் சித்தர் எப்போது,எந்த சூழ்நிலையில் மறுபிறவி எடுப்பார் என்று சொல்லியிருக்கிறார். ஒரு நாள் உலகம் இருளை சந்திக்கும்.பல்வேறு இடங்களில் போர் மற்றும் பஞ்சம் உண்டாகும்.

எங்கு பார்த்தாலும் துக்கமான செய்திகளே காணமுடியும்.கடவுளுக்கு பூஜை செய்வது குறையும்.இவ்வாறான சூழ்நிலையில் தான் மீண்டும் போகர் பூமிக்கு வருவார்.அவர் மனிதவடிவில் பூமிக்கு வரும் வேளையில் கோரக்கர் சித்தரின் சமாதி பிரகாசமாக ஒளிரும்.

ஜோதிர்லிங்கம் ஒன்று தானாகவே நிறுவப்படும். அந்த சமயத்தில் போகர் சித்தர் பூமிக்கு வந்து விட்டார் என்று தெரிந்து கொள்ளலாம் என்று எழுத பட்டிருக்கிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US