நிம்மதி எப்போது கிடைக்கும்?
இப்பதிவு வருமானம் ஈட்ட வேலைக்கு செல்லும் அன்பர்களுக்கானது பரபரப்பான இந்த வாழ்க்கையில் நிம்மதி எங்கே கிடைக்க போகிறது என்று இதை படித்ததும் நீங்கள் புலம்புவது கேட்கிறது.
Work Commitments, Work Politics, உடல் நல குறைபாடுகள், முதியவர்களை பாதுகாக்க கூடுதலாக உழைக்க வேண்டிய கட்டாயம், கடன் பிரச்சனைகள், கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள், உறவு முறிவுகள், பணியில் முன்னேற்றம் இல்லை, வாங்கும் சம்பளத்திற்கு அதிகமாக வேளை செய்வதாக எண்ணம், அதிக சம்பளத்தில் வேலையே செய்யாமல் இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் சக ஊழியரை பார்த்து பொறாமை, திருமண தடை, என நிம்மதி இல்லாமைக்கு காரணத்தை அடுக்கி கொண்டே செல்லலாம்.
இந்த பதிவை நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்களானால் உங்கள் நிம்மதியை இனி யாராலும் கெடுக்க முடியாது, அதற்கு முதல் நிம்மதி என்றால் என்ன என்பது பற்றின தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.
எப்போதும் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள் அதற்கு ஒரு காரணம் வேறு தயாராக வைத்து இருப்பிர்கள் நிம்மதியை நமக்கு யாராலும் தர முடியாது என்பதே உண்மை நிம்மதி எப்போதும் நமக்குள் தான் இருக்கிறது.
நாம் அதை வெளியில் தேடிக்கொண்டு இருப்பதால் புலபபடாமல் இருக்கிறது ஒரு நிமிடம் உங்களுக்கு உண்மையில் என்ன தேவை என யோசித்து பாருங்கள் அடிப்படை தேவைகளில் ஏதேனும் குறைகள் உள்ளனவா? இல்லை என்றால் நீங்கள் பாதி கிணறு தாண்டிவிட்டிர்கள் என்று அர்த்தம் அடுத்து பணியிடம் வருவோம்.
நீங்கள் உங்கள் நிறுவனத்தில் செய்வது வேலை தான், அது உங்கள் வாழ்க்கை இல்லை, ஊதியம் பெறுவதற்கு மட்டும் தான் அந்த வேலையை செய்கிறீர்கள்.
அதுவும் என்ன ஊதியம் பெற போகிறீர்கள் என உறுதி செய்து விட்டு தான் அந்த வேலையில் சேர்த்து இருக்கிறிர் எனும் போது அலுவலக வாசலை கடந்ததும் உங்கள் இயல்பு வாழ்க்கையின் பக்கம் திரும்பிட வேண்டும், சதா வேலையை பற்றியே சிந்திப்பாவராய் நீங்கள் இருப்பிர்களானால் உங்களுக்கு வாழத் தெரியவில்லை என்று தான் அர்த்தம்.
வேலை என்பது நாம் வாழ பொருளாதார ரீதியில் சமநிலை படுத்தி செல்ல வகை செய்யும் ஒரு பகுதி தான் அதை கடந்து இன்னும் நாம் உபயோகப்படுத்த, அனுபவிக்க எத்தனையோ விடையங்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன வேலையை வீட்டுக்கு எடுத்து வந்தாலும் வீட்டினை வேலைக்கு கொண்டு போனாலும் இரண்டுக்கும் பாதிப்பு தான், நீங்கள் எந்த மாதிரியாக உங்கள் வேலையை செய்கிறீர்கள் என உங்களுக்குள் ஒரு சுய மதிப்பிடு செய்து கொள்ளலாமா?
எல்லா வேலையையும் இழுத்து போட்டு பணி சுமை அதிகம் என புலம்புவாரா? அடுத்தவருக்கு உதவி செய்து தான் வேலையை கோட்டை விடுபவரா? உடன் வேலை செய்யும் நபர்களை சதா சந்தேக கண்ணுடன் கண்கானித்து வருபவரா? நீங்கள் உங்கள் மனநிலைய மாற்றவில்லையெனில் நிம்மதி என்பது உங்களுக்கு எட்டா கனி தான் பிரபஞ்சம் எல்லோருக்கும் ஒரு சூட்சம கணக்கு வைத்துள்ளது
நீங்கள் எந்த ஒரு செயலை செயும் போதும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடடாலும் அதற்கான விளைவு கடடாயாம் நடந்தே திரும் அந்த சமயத்தில் வேண்டுமானால் நீங்கள் தப்பித்து கொள்ளலாம்
ஆனால் அது உங்கள் கரு மையத்தில் இருப்பாக சேமித்து வைக்கப்பட்டு சரியான சமயத்தில் விளைவை கொடுக்கும் ஆகவே அடுத்தவரை பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு எப்போது நீங்கள் வருகிரீர்களோ அப்போது நிம்மதியை சுவைக்கலாம்
ஒவொருவரும் தனிப்பட்ட திறமை உள்ளது அவருக்கு எதுவும் தெரியவில்லை என நீங்கள் நினைப்பதும் தவறு தான் உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைப்பதும் தவறு தான் இதை உணர்த்த பிறந்த பழமொழி தான் "நினைப்பு தான் பொழப்ப கெடுக்கும்"
நாம் நமது வேலைக்கு மன சாட்சியின் படி உண்மையாக உள்ளோமா என அடிக்கடி கேட்டு பணி செய்ய உங்கள் பணி தெய்விக தன்மைக்கு மாறும் ஒரு கட்டத்தில் உங்களுக்கு வர இருக்கிற சலுகைகள் வேறு வேறு வகையில் நிகழத்தி காட்டுவதை உங்கள் அனுபவத்திலேயே உணரலாம்
ஊதிய உயர்வுக்காக வேலை செய்பவர்கள், வேலை நேரத்தில் தனிப்பட்ட வேலைகள் செய்பவரானால் நீங்கள் நிறுவனத்தை ஏமாற்றுகின்றிர் என்று பொருள்.
வேலை நேரத்தில் வேலை செய்யாமல் இருந்தாலும், அலட்சியமாய் இருந்தாலும், உங்கள் வேலையை அடுத்தவன் மேல் சுமத்தி பிழைத்து வந்தாலும், ஏற்ற பொறுப்பினை நிறைவேறவில்லை என்றாலும் என இவ்வனைத்து செயல்களையும் ஒருவர் பார்த்து பதிவு செய்து கொண்டே இருக்கிறார்
கடவுள் இல்லை அது உங்கள் ஆழ் மனம் தான், அதனிடம் இருந்து யாரும் தப்ப முடியாது இதற்கான விளைவும் கட்டாயம் வந்து சேரும் இதற்கும் ஒரு பழமொழி உள்ளது பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் நான் வேலை தான் செய்கிறேன்
இது என் வாழ்க்கை இல்லை என்ற எண்ணம் உங்களுக்குள் அடிக்கடி உதிக்க வேண்டும் அப்போது தான் வாழ்க்கை என்பது வேலை மட்டும் அல்ல என்பதும் வேலையில் சங்கடம் வந்தாலும் வேலை என்றால் அப்படித்தான் இருக்கும்
இது வெறும் வேலை தான் என்ற விழிப்புணர்வு கிடைக்கும் இந்த கோளாறுகளால் தான் பணி நேரத்தில் சம்மந்தம் இல்லாமல் உடல் நிலை கேட்டுபோகிறது நீங்கள் அடக்கி வைத்து இருக்கும் Negative ஆன எண்ணங்கள் செயலாக்கம் பெறாமல் அல்லது உங்களை விட்டு வெளியே போகாமல் இருக்கும் பட்சத்தில் அது உங்களையே சிதைத்து தான் இலக்கை அடையும் அதிகமாய் உடல் நல பிரச்னை உள்ளதா? நீங்கள் வேலை செய்யும் விதமும் ஒரு காரணம் தான் என்பதை மறக்க வேண்டாம் தொடர்புள்ள அவர்கள் உயிரோடு ஊடுருளி ஒரு தடவைளர்த்துக் கொள்ள முடியும்.
எத்தனை பேருடைய நட்பு தலை ஏற்பட்டும் வேதாத்திரி மகரிஷி யின் வார்த்தைகள் இங்கு பொருத்தமாக இருக்கும் "சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றால் என்ன ஆகும் என்றால் நம்மைச் சுற்றி எத்தனை மக்கள் இருக்கிறார்களோ, நமக்குத் தொடர்புள்ள அவர்கள் உயிரோடு ஊடுருவி ஒரு நட்பை வளர்த்துக் கொள்ள முடியும்.
எத்தனை பேருடைய நட்பு நல்ல முறையிலே ஏற்பட்டுக் கொண்டிருக்குமோ, அந்த அளவுக்கு மனதிலே நிறைவு உண்டாகும். அதே போல் வெறுப்புணர்ச்சி கொள்கிறோம் என்றால், ஒவ்வொரு வெறுப்புணர்ச்சியும் ஒருவரைத் தள்ளிவிட்டுக் கொண்டேயிருக்கும்.
அவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவராக நமக்குத் தெரிந்தவர்களோ, நெருங்கியவர்களோ ஒதுங்கிக் கொண்டே இருப்பார்களானால், முகமலர்ச்சி ஏற்படவே ஏற்படாது.
ஆகையினால், எப்பொழுதுமே நட்பை விருத்தி செய்து கொள்வதற்கு நம்முடைய செயலில், இவருக்கு என்ன நன்மை செய்ய முடியும், நமது ஆற்றலைக் கொண்டு, இன்முகம் காட்டி என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டே வரும்பொழுது, அதற்காக உங்களுடைய நன்மையை அல்லது இருப்பை அழித்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
இருப்பதை வைத்துக் கொண்டு செய்தாலே போதும். நாம் ஒருவருக்கு ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால், அதுவே நல்லபடியாக அமையும். அந்த முறையில் எதிர்பார்ப்பதைத் தவிர்க்கலாம்.
இரண்டாவதாக, நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைத் தேர்ந்தெடுத்து அப்படிச் செய்வதற்கு வேண்டிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளும்போது நிறைசெல்வம் இருக்கிற மாதிரி நமது மனநிலை வளர்ந்து கொண்டேயிருக்கும்.
- வேதாத்திரி மகரிஷி
எனவே வேலை வேறு வாழ்க்கை வேறு என்று புரிந்து கொண்டு உயரிய இலக்குகளை அடைந்து மேலான வாழ்வை அடைவோம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |