வாஸ்து: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பணத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்?

By Yashini Mar 19, 2024 05:13 AM GMT
Report

பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும்.

தொழில் செய்பவர்கள் தங்களது இருக்கை ஆனது வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்க வேண்டும்.

அதேபோல் கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் இருப்பது நல்லது.

பணம் வைப்பதற்கான மிகச்சரியான திசை என்றால் வடக்கு திசை தான்.

வாஸ்து: வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பணத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்? | Where To Put Money To Increase Wealth

அறையின் 4 மூலைகளான வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு போன்ற மூலைகளில் பணத்தை வைப்பது கூடாது. 

குறிப்பாக, வீட்டின் தெற்கு திசையும் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

பணம் வைத்திருக்கும் இடமானது நுழைவு வாயிலை பார்த்தவாறு கட்டாயம் இருக்கக் கூடாது.

வீட்டிற்குள் நுழையும் மற்றவர்களின் கண்களுக்கு நேரடியாக படாதபடி இருக்கவேண்டும். அதேபோல் பூஜையறையில் பணத்தை வைப்பதும் தவறான முறையாகும்.

பணம் வைத்திருக்கும் இடத்தை பூச்சிகள் வராதபடி எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.  

பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்பொழுதும் 1 ரூபாய் நாணயம் ஒன்று இருக்க வேண்டும்.

இவ்வாறு வாஸ்து குறிப்புகளை பின்பற்றி ஈட்டிய செல்வத்தை நிலைக்குமாறு வழி செய்து கொள்ளுங்கள்.   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US