அதிகம் யோசித்து கொண்டே இருக்கும் ராசிகள் யார் தெரியுமா?
பொதுவாக மனிதன் எதையும் அதிகமாக யோசிக்கும் திறன் கொண்டவர்கள். அதிலும் சிலர் ஒரு விஷயத்தை பற்றி மிக தீவிரமாக யோசித்து கொண்டே இருப்பார்கள். ஒரு காரியம் நடக்கும் முன் அதை பற்றி பல கேள்விகளும் குழப்பங்களும் அவர்களுக்கு உண்டாகும்.
மனதை எப்பொழுதும் குழப்பமான சூழ்நிலையில் வைத்திருப்பார்கள். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும், அவர்கள் மனம் எதையாவது சிந்தித்து கொண்டே இருக்கும்.
பொதுவாக, இவர்கள் எப்பொழுதும் மன அழுத்தத்தில் இருப்பார்கள். அந்த வகையில் 12 ராசிகளில் எந்த ராசிகள் இயல்பாகவே அதிகம் சிந்தித்து கொண்டு இருக்கும் குணம் படைத்தவர்கள் என்று பார்ப்போம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு எதையும் நுணுக்கமாக யோசிக்கும் திறன் கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை செய்யும் முன் பல முறை யோசித்து செய்வார்கள். இருந்தாலும் அவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் சில சிரமமும் சங்கடமும் உண்டாகும். இவர்கள் தேவை இல்லாமல் எதையாவது யோசித்து கொண்டு இருப்பதை தாண்டி அவர்கள் அதை பிறரிடம் பகிர்ந்து கொள்வதால் இவர்கள் சுற்றி உள்ளவர்களையும் அதிகம் யோசிக்க வைத்து விடுவார்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சி வசப்படக்கூடிய ராசிக்காரர்கள். அவர்களுக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டது என்றால் எதையும் பற்றி யோசிக்காமல் செய்யவேண்டும் என்று நினைத்தாலும். அந்த விஷயத்தை அடைந்த பிறகு அவர்களுக்கு மனம் அதிக அளவில் குழப்பத்தையும் சந்தேகத்தையும் கொடுத்து விடும். இவர்களிடம் எப்பொழுதும் ஒரு விதமான பயத்தை காண முடியும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் சம நிலை மற்றும் ஒழுக்கத்தை பின் பற்றுவதால் இவர்கள் நியாயம் அநியாயம் பற்றி எப்பொழுது யோசித்து கொண்டே இருப்பார்கள். இவர்களை சுற்றி ஏதேனும் அநியாயம் நடந்தால் இவர்களை கைகளில் பிடிக்க முடியாது. எதற்காக அவர்கள் அப்படி செய்தார்கள், என்று ஒரு விஷயத்திற்கு விடை கிடைக்கும் வரை அதிகம் யோசித்து கொண்டே இருப்பார்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் துடிப்பான மனம் கொண்டவர்கள். இவர்கள் புத்திசாலியான குணம் அனைவரையும் அதிகம் கவர்ந்தாலும் இவர்களின் மன குழப்பம், தடுமாற்றம் இவர்கள் மேல் உள்ள மரியாதையை குறைக்க செய்து விட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தீர ஆலோசிக்கும் திறன் இருந்தாலும், முடிவு எடுப்பதற்கு கால தாமதம் செய்வார்கள். இவர்கள் நிலை இல்லாத மனதால் மிகவும் கஷ்ட பட வாய்ப்புள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |