மகாபாரதம்: கர்ணனுடைய தலையை துண்டித்த அந்த அஸ்திரம் எது?

By Sakthi Raj Oct 01, 2026 11:59 AM GMT
Report

மகாபாரதம் என்பது நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்? வாழக்கூடாது எதை செய்தால் நன்மை எதை செய்தால் தீமை என்று பிரபஞ்சத்தினுடைய ஒரு செயல்பாட்டை காட்டக்கூடிய ஒரு அற்புதமான வழிகாட்டுதலக இருக்கிறது.

அந்த வகையில், மகாபாரதத்தின் போரில் 17ஆம் நாள் குருசேத்திர போர்க்களத்தில் ஒரு முக்கியமான தருணம் நிகழ காத்திருக்கிறது. ஒரு புறம் பாண்டவர்களின் வீரரான அர்ஜுனனும், மறுபுறம் கௌரவர்களின் மிகச்சிறந்த வில்லாளிகளில் ஒருவரான கர்ணனும் நின்று கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.

மகாபாரதம்: கர்ணனுடைய தலையை துண்டித்த அந்த அஸ்திரம் எது? | Which Astra Was Used To Kill Karnan In Mahabaratha

அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் ஒரே கிருஷ்ணர்… ஏன் முடிவு மட்டும் வேறானது?

அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் ஒரே கிருஷ்ணர்… ஏன் முடிவு மட்டும் வேறானது?

கர்ணனும் அர்ஜுனனும் ஒருவருக்கு ஒருவர் சக்தி வாய்ந்த அஸ்திரங்களை ஏவி கடுமையாக போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போதுதான் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. கர்ணனின் தேரின் ஒரு சக்கரம் பூமியில் புதைந்து போகிறது. அதை மீட்டெடுப்பதற்காக கர்ணன் தேரிலிருந்து கீழே இறங்கி சக்கரத்தை வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்கிறார்.

அந்த நேரத்தில் கர்ணன் போரின் தர்மத்தை நினைவுபடுத்தி அர்ஜுனனிடம் சிறிது நேரம் காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டதாக மகாபாரத கதை மரபு சொல்லப்படுகிறது. ஆனால், கிருஷ்ணரோ அர்ஜுனிடம் கர்ணனை உடனடியாக தாக்க வேண்டிய சூழ்நிலைக்கு எடுத்துச் சொல்கிறார்.

அந்த நேரத்தில், கர்ணன் செய்திருந்த செயல்களையும் போருக்கு முன் நடந்த நிகழ்வுகளையும் கிருஷ்ண பகவான் எடுத்துச் சொல்கிறார். கர்ணனின் தேர் சக்கரம் இன்னும் பூமியிலேயே சிக்கியிருந்த நேரத்தில் ஒரு முக்கியமான தருணம் பார்த்து அர்ஜுனன் வில்லில் ஒரு பேராற்றல் கொண்ட அஸ்திரத்தை தொடுத்தார்.

மகாபாரதம்: கர்ணனுடைய தலையை துண்டித்த அந்த அஸ்திரம் எது? | Which Astra Was Used To Kill Karnan In Mahabaratha

பகவத் கீதை: உறவுகள் நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான 3 பாடங்கள் என்ன?.

பகவத் கீதை: உறவுகள் நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான 3 பாடங்கள் என்ன?.

அது வெறும் சாதாரண அம்பு அல்ல. அது "அஞ்சலிக வஸ்திரம்". அர்ஜுனன் வஸ்திரத்தை ஏவி கர்ணனுடைய தலையை துண்டித்ததாக குறிப்பிடப்படுகிறது. அந்த அம்பு இந்திரனின் இடியை போன்ற மிகுந்த சக்தி கொண்டதாகவும் மிகப்பெரிய அளவில் அழிவாற்றல் உடையதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாறு குருஷேத்திரப் போரை கர்ணனுடைய வீரப்பயணம் முடிவிற்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கர்ணனுடைய மரணம் மகாபாரதத்தில் மட்டுமில்லாமல் அதை வாசிக்கக்கூடிய நம்முடைய மனதிலும் ஒரு உணர்ச்சிகரமான தருணத்தை கொண்டு வருகிறது.

வீரமும் விதியும் சாபங்களும் தர்மத்தின் சிக்கல்களும் ஒன்றாக சந்திக்கக்கூடிய தருணமாக கர்ணனுடைய இறப்பு அமைந்திருப்பதை நம்மால் உணர முடியும். குறிப்பாக, கர்ணனின் உடைய தேர் சக்கரம் பூமியில் சிக்கிய பொழுது கர்ணனின் முந்தைய சாபங்களுடன் தொடர்படுத்தும் முக்கியமான நிகழ்வாக மகாபாரதம் மரபில் குறிப்பிடத்தக்கது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US