தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்சனை வருகிறதா? கர்ம வினைகளைப் போக்கும் 6 பரிகாரங்கள்

By Sakthi Raj Oct 01, 2026 09:13 AM GMT
Report

இந்த வாழ்க்கை என்பது ஒரு கர்ம சுழற்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கர்ம சுழற்சி என்பது நம்முடைய தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. அப்படியாக, ஒரு சிலருக்கு வாழ்க்கையில் தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அவர்கள் சந்தித்த முந்தைய பிரச்சனையில் நான் அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டு விட்டேன் என்று நகர்ந்து இருப்பார்கள்.

ஆனால், மீண்டும் அதே போல் ஒரு பிரச்சினை வேறு ஒரு உருவத்தில் வந்து நிற்கும். இதில் தான் கர்மாவின் ஆழமான பாடம் ஒளிந்து இருக்கிறது. அப்படியாக, இந்த கர்ம பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு ஆன்மீக வழிபாடும் இறைவனுடைய பரிபூரண அருளால் மட்டுமே முடியும். அந்த வகையில், கர்ம பலனை போகக்கூடிய 6 முக்கிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்சனை வருகிறதா? கர்ம வினைகளைப் போக்கும் 6 பரிகாரங்கள் | Remedies For Repeated Karma Problems In Life

பகவத் கீதை: உறவுகள் நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான 3 பாடங்கள் என்ன?.

பகவத் கீதை: உறவுகள் நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான 3 பாடங்கள் என்ன?.

1. பிரச்சனையை கவனியுங்கள்:

பொதுவாகவே, முதலில் ஒரு பிரச்சனை வரும் பொழுது அதில் எந்த கவனமும் செலுத்த மாட்டோம். இரண்டாவது நடக்கும் பொழுதும் நமக்கு அதை பற்றி ஒரு சரியான புரிதல் இருக்காது. தொடர்ந்து நடக்கின்ற பொழுதுதான் அது முந்தைய பிரச்சனையின் தொடர்ச்சியாக இருப்பதை உணர்கின்றோம். அப்பொழுது நாம் எந்த ஒரு பதற்றமும் பயமும் கொள்ளாமல் முதலில் நம்மை நாம் அந்த இடங்களில் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

எந்த இடத்தில் நாம் தவறு செய்கின்றோம்? எதனால் இது நடக்கிறது? இந்த பிரச்சனைக்கு நாமும் ஒரு வகையில் காரணமாக இருக்கக்கூடும் என்பதால் அதனை நாம் ஆராய்ந்து சரி செய்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். தேவையில்லாத கோபத்திற்கு பதிலாக உங்களை நீங்கள் புரிந்து கொள்ள துவங்கும் பொழுது அந்த பிரச்சினை படிப்படியாக அன்றைய நாளிலிருந்து உங்களை விட்டு விலகுவதை பார்க்கலாம்.

2. மன்னிக்க பழகுங்கள்:

மனிதனுக்கு அவனை மீறிய ஒரு எதிர்மறை செயல்கள் நடக்கின்ற பொழுது கோபம் வருவது இயல்புதான். ஆனால், இந்த இடங்களில் நாம் ஒரு விஷயத்தை கவனமாக புரிந்து கொள்ள வேண்டும். கோபம் நம்முடைய மனதை ஆட்கொள்கின்ற பொழுது நமக்கு நிம்மதி கிடைப்பதில்லை. கோபம் நம்மை உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் நம்முடைய அழகை கெடுக்கிறது.

ஆதலால் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் சரி நீங்கள் மன்னிப்பதற்கு முன்பாக உங்களுடைய கோபம் உங்களை சூழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த பிரச்சினையை நீங்கள் நன்றாக ஆராய்ந்து புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தன்மை இருக்கிறது என்று எல்லாவற்றையும் மன்னிக்க பழகுங்கள்.

உங்களையும் எதிர் தரப்பினரையும் நீங்கள் மன்னித்து விடுங்கள். அமைதியால் நாம் நம்மை வென்று விடலாம். கோபத்தால் நாம் நம்மை இழந்து விட மட்டுமே முடியும்.

தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்சனை வருகிறதா? கர்ம வினைகளைப் போக்கும் 6 பரிகாரங்கள் | Remedies For Repeated Karma Problems In Life

பேராபத்திலும் நம்மை காக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா ?

பேராபத்திலும் நம்மை காக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா ?

3. எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள்:

முதலில் யாரிடமாக இருந்தாலும் நாம் எந்த ஒரு விஷயத்திற்கும் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கான செயல்களை கடமையை நீங்கள் செய்து விடுங்கள். எதிர் தரப்பினர் அந்த செயலுக்குத் தகுந்த ஒரு நன்றியையோ, பாசத்தையோ, அன்பையோ வெளிப்படுத்தினால் ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதைக் கடந்து எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளும் பிரச்சனைகளுக்கு ஒரு அடிப்படை வேராக இருக்கிறது. அதுவும் நம்மை பல நேரங்களில் மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சனைக்கு தள்ளுகிறது.

4. தியானம் செய்யுங்கள்:

தியானம் என்பது பயிற்சி. ஒரே நாளில் நம்மால் முழு தியானத்தில் ஈடுபட முடியாது. ஆனால், தினமும் ஒரு 30 நிமிடம் உங்களுக்காக கண்களை மூடி எதைப் பற்றியும் யோசிக்காமல் அமர்வதிலிருந்து துவங்குகிறது தியானம்.

இவ்வாறு நீங்கள் உங்களை ஒரு 30 நிமிடம் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்ற பொழுது உங்களுடைய மனமும் உடலும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. பிறகு நீங்கள் அந்த பயிற்சியின் வழியாக பற்றின்மையையும் கோபதாபங்கள் எல்லா விஷயங்களிலிருந்தும் நீங்கள் விடுபட்டு முன்னேறி செல்லலாம்.

5. ஆன்மீக பயணம் செல்லுங்கள்:

இந்திய ஆன்மீக மரபுகளின் அடிப்படையில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது என்பது நமக்கு மன அமைதியை மட்டும் கொடுப்பதில்லை. அவை நம்முடைய கர்ம பலன்களையும் சரி செய்கிறது. நாம் ஒரு சில கோவில்களுக்கு சென்று இருப்போம். எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். அது நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் இருக்கலாம்.

ஆனால், இந்த இரண்டும் நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்ட கட்டத்திற்கு நகற்றி செல்ல கூடியதாகவே இருக்கிறது. ஆக, முடிந்தவரை இந்தியாவில் முக்கியமான திருத்தலங்களாக கருதக்கூடிய காசி விஸ்வநாதர் ஆலயம் வாரணாசி, திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆந்திர பிரதேசம், ராமநாதசுவாமி ராமேஸ்வரம், கேதார்நாத் கோவில் உத்தரகாண்ட், போன்ற முக்கியமான புனித தலங்களுக்கு சென்று வாருங்கள்.

தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்சனை வருகிறதா? கர்ம வினைகளைப் போக்கும் 6 பரிகாரங்கள் | Remedies For Repeated Karma Problems In Life

6. தர்மத்துடன் வாழ பழகுங்கள்:

வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விடலாம். ஆனால், எப்படி வாழ்ந்தாலும் நாளை என்ற ஒரு நாளுக்கு நாம் வாழ்ந்ததற்கான கணக்குகளை சொல்ல வேண்டும். அதை மனதில் வைத்துக் கொண்டு வாழ்வது அவசியம். பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று எண்ணிவிடாதீர்கள். நம்முடைய செயல்களுக்கு நாமே பொறுப்பு. நம்மை இயக்கும் தலைவர் இறைவன் ஒருவர் இருக்கிறார்.

அவருக்கு நாம் செய்த செயலுக்கான விளக்கத்தை வாழ்க்கையில் இறுதியில் கட்டாயம் கொடுக்க வேண்டும். அதை மனதில் கொண்டு எந்த நிலையிலும் தர்மம் தவறாமல் வாழ்வது அவசியம். அப்படியாக, கர்ம பலன் என்பதே நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள தவறுவதால் நம்மை பின் தொடரக்கூடிய ஒன்றாகவே பல நேரங்களில் அமைகிறது.

ஆதலால், அமைதியாக அமர்ந்து எதனால் பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு? அது எதனால் வருகிறது அதை மறுமுறை செய்யாமல் தவிர்க்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள் நிச்சயமாக வாழ்க்கை மாறும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US