பெண்கள் தவறியும் இந்த நிறத்தில் பொட்டு வைக்காதீர்கள்
பெண்கள் என்றாலே அழகு தான்.அப்படியாக இந்து மத சாஸ்திரத்தில் பெண்கள் கட்டாயம் நெற்றியில் பொட்டு வைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.அதே போல் கைகளில் வளையல்கள்,காலில் கொலுசு கழுத்தில் செயின் போன்றவை எப்பொழுதும் அணிந்து இருக்கவேண்டும் என்றும் சொல்லுவதுண்டு.
இந்த பொருட்கள் எல்லாம் பெண்களை அழகு படுத்தும் அணிகலன்கள் தாண்டி அவை அவர்களை பல இடங்களில் பல எதிர்மறை ஆற்றலிடம் இருந்து பாதுகாக்கிறது.அப்படியாக பெண்கள் நெற்றியில் எந்த நிற பொட்டுகள் வைக்கலாம்.எந்த நிற பொட்டுகள் வைக்கக்கூடாது என்று பார்ப்போம்.
பொதுவாக பெண்கள் நெற்றியில் சிவப்பு நிற பொட்டுகள் தான் அதிகம் வைத்துக்கொள்வார்கள்.இருந்தாலும் சமயங்களில் அவர்கள் ஆடைக்கு ஏற்ப வண்ண நிறத்தில் பொட்டு வைக்கிறார்கள்.அப்படியாக பெண்கள் கருப்பு நிறத்தில் பொட்டு வைக்கலாமா?என்று கேட்டால் நிச்சயம் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.
கருப்பு நிறங்கள், சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களை உள்வாங்கி அழிக்கக்கூடியவை. மேலும், சனியின் நிறம் கருப்பு என்பதால், சனி கிரகத்துடனும், கருப்பு பொட்டு தொடர்புப்படுத்தப்படுகிறது. இந்த கருப்பு நிறத்தில் பெண்கள் பொட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு கருப்பு நிற பொட்டு வைக்கும் பொழுது அது அவர்களுக்கு சாதகமாக அமைவதில்லை.ஆனால் சிறுகுழந்தைகளுக்கு கருப்பு நிறத்தில் பொட்டு வைக்கும் பொழுது அது அவர்களை திருஷ்டியில் இருந்து காக்கிறது.
ஆனால் பெண் குழந்தைகள் வளர்ந்து ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு அதை தவிர்க்க வேண்டும்.அதிலும் திருமணமான பெண்கள் கட்டாயம் கருப்பு நிறத்தில் பொட்டு வைக்க கூடாது.அவை எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதோடு வீட்டில் சண்டை,மனக்கசப்புகள் உண்டாக்கும்.ஆதலால் முடிந்த வரை பெண்கள் கருப்பு நிற பொட்டு வைப்பதை தவிர்ப்பது நன்மை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |