எந்த தெய்வத்திற்கு எந்த நிற பூக்கள் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா?
இறைவழிபாடு என்பது அன்பு நிறைந்தது. அப்படியாக இறைவனுக்கு நம்மால் முடிந்த நெய்வேத்தியம் மற்றும் மலர்கள் சாற்றி நாம் வழிபாடு செய்வோம். அந்த வகையில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அவர்களுக்கு பிடித்த மற்றும் உகந்த பூக்கள் இருக்கிறது.
அதைக் கொண்டு நாம் பூஜை செய்து வழிபாடு செய்யும் பொழுது அந்த தெய்வம் மனம் குளிர்ந்து மகிழ்ந்து அடைந்து நமக்கு ஆசிர்வாதம் செய்வதோடு நாம் நினைத்த காரியம் வெகு விரைவில் நடைபெறும். அப்படியாக எந்த கடவுளை வழிபாடு செய்யும்பொழுது எந்த பூக்களால் வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.விநாயகர் - விநாயகருக்கு சிவப்பு நிற மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த சிவப்பு நிற மலர்கள் சாற்றி நாம் வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு தடைகள் யாவும் விலகி ஒரு வாழ்க்கையில் புது தொடக்கம் உண்டாகும்.
2. மகாலட்சுமி - மகாலட்சுமியை வழிபாடு செய்யும் பொழுது நாம் தாமரை பூவை கொண்டு வழிபாடு செய்யும்பொழுது அம்பாளின் பரிபூரண அருள் கிடைக்கும். தாமரை தூய்மை, செல்வம், செழிப்பு அழகு ஆகியவற்றை குறிக்கக்கூடியதாக இருக்கிறது.
மேலும் மகாலட்சுமி தாமரையில் வீற்றிருந்து நமக்கு அருள்பாலித்து வருகிறார். ஆதலால் தாமரை வைத்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
3. பெருமாள் - பெருமாளை வழிபாடு செய்யும் பொழுது துளசி இலை அல்லது மஞ்சள் நிறத்தில் பூக்கள் அல்லது தாமரை கொண்டு நாம் வழிபாடு செய்தால் பெருமாளின் அருளால் வாழ்க்கை வளமாகும்.

4. சிவபெருமான் - சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது வில்வ இலைகளை கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். வில்வ இலை அமைதி மற்றும் மோட்சத்தை குறிக்ககூடியது. அவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது சிவபெருமானின் பரிபூரண அருளை நாம் பெறலாம்.
5. துர்காதேவி - துர்கா தேவியை வழிபாடு செய்யும்பொழுது செம்பருத்தி இலைகளைப் படைத்து வழிபாடு செய்வது என்பது நமக்கு வலிமையும் வெற்றியையும் கொடுக்கும். மேலும் துர்கா தேவியின் அருளால் கடின காலங்களில் இருந்து நாம் விடுபடலாம்.
6. சூரிய பகவான் - சூரிய பகவானை வழிபாடு செய்யும் பொழுது சிவப்பு சாமந்தி பூவை படைத்து வழிபாடு செய்தால் நிச்சயம் சூரிய பகவானின் அருளால் நாம் மிக உயர்ந்த நிலைக்கு செல்லலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |