எந்த நாட்களில் குலதெய்வத்தை வழிபாடு செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்
மனிதர்கள் சந்திக்கும் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் விலகும் என்பது நம்பிக்கை. அப்படியாக, குலதெய்வத்தை எந்த நாட்கள் சென்று வழிபாடு செய்தால் நமக்கு முழு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
சில குடும்பங்களில் சோதனை மேல் சோதனை என்று வந்துகொண்டே இருக்கும். அவர்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று முறையாக வழிபாடு செய்து வர அவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை காணலாம்.
அதனால், முடிந்தவர்கள் மாதம் ஒருமுறை, ஆறு மாதம் ஒருமுறை அல்லது வருடம் ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பாகும். இருப்பினும் சிலருக்கு குலதெய்வம் கோயிலுக்கு நினைத்த நேரத்தில் செல்ல முடியாது, அவர்கள் கட்டாயம் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளில் குலதெய்வத்தை மனதில் நினைத்து நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்.
மேலும், குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய எல்லா நாட்களும் சிறந்த நாட்களே என்றாலும் அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய இரண்டு நாட்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய மிக உகந்த தினங்கள் ஆகும்.
அதோடு குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது குலதெய்வத்திற்கு பிடித்த நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்து வரலாம்.
மேலும், அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறந்த பலன் கொடுக்கும்.
அதோடு உங்களுடைய குலதெய்வம் சிவ பெருமானாகவோ அல்லது சிவனுடன் தொடர்புடைய முனீஸ்வரர் போன்ற தெய்வங்களாக இருந்தால் திங்கட்கிழமை அன்று சென்று வழிபாடு செய்து வரலாம்.
அதுவே உங்கள் குலதெய்வம் முருகனுடன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால் செவ்வாய்கிழமையில் சென்று வழிபாடு செய்யலாம். பெருமாளுடன் தொடர்புக்கொண்ட குலதெய்வமாக இருந்தால் புதன் மற்றும் சனிக்கிழமையில் சென்று வழிபடலாம். அம்பாள் போன்ற தெய்வங்களாக இருந்தால் வெள்ளிக்கிழமையில் சென்று வழிபாடு செய்வது மிக சிறந்த அருளை பெற்று கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |