இன்றைய ராசி பலன்(18-05-2025)

Report

மேஷம்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

ரிஷபம்:

இன்று எதையும் துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

மிதுனம்:

குடும்பத்தில் மூன்றாம் நபரால் உங்களுக்கு சில சங்கடங்கள் உருவாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட வேலை செய்வதால் மன உளைச்சல் உண்டாகும். சகோதரி வழியே நல்ல ஆதரவு கிடைக்கும்.

கடகம்:

வாய்ப்பு தேடிவரும். நேற்றைய பிரச்னை முடியும். எதிர்பார்த்த வருவாய் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர். நவீன பொருட்கள் வாங்குவீர்.

சிம்மம்:

வியாபாரத்தில் சில முக்கிய நபர்களின் அறிமுகம் நன்மை தரும். வாங்கிய கடனை விரைவில் அடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் சில மன கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

கன்னி:

இன்று உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும்.

மேஷம் முதல் கடகம் வரை சனி குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சி என்ன பலனை கொடுக்கிறது?

மேஷம் முதல் கடகம் வரை சனி குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சி என்ன பலனை கொடுக்கிறது?

துலாம்:

மனதில் தெளிவும் தைரியமும் பிறக்கும். வேலையில் சந்தித்த சங்கடங்கள் விலகும். பிறரிடம் பேசும் பொழுது ஒருமுறைக்கு பல முறை யோசித்து பேசுவது நன்மை தரும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்:

முயற்சி வெற்றியாகும். உங்கள் கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன்களை அடைப்பீர். எதிலும் அலட்சியம் வேண்டாம். விருப்பம் நிறைவேறும்.

தனுசு:

உங்கள் வீட்டில் முக்கிய விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு ஆரோக்கிய ரீதியாக சந்தித்த குறைபாடுகள் விலகும். மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும்.

மகரம்:

திட்டமிட்டிருந்த வேலைகளில் மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும். உடல்நிலையில் கவனம் தேவை.

கும்பம்: 

முயற்சிகளில் தடையும் தாமதமும் உண்டாகும். புதிய முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பயணத்தில் நிதானம் தேவை. வரவு செலவில் நெருக்கடி உண்டாகும்.

மீனம்:

நீண்ட நாட்களாக நீங்கள் சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும். மதியம் மேல் சில சங்கடங்கள் தோன்றி மறையலாம். வீண் சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US