சந்திராஷ்டமம் நாட்களில் மறந்தும் இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்
நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் சந்திராஷ்டமம் வரும் நாட்களில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாக, சந்திரன் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு வரும் அந்த இரண்டே கால் நாட்களை சந்திராஷ்டமம் என்பார்கள்.
இதில் தேய்பிறை சந்திராஷ்டமத்தை விட வளர்பிறை சந்திராஷ்டமம் அதிக சோகத்தை ஏற்படுத்தி விடும். அதாவது, வளர்பிறைசந்திராஷ்டமத்தால் ஒரு மனிதனுக்கு ஏழரை ஆண்டு காலம் சனியால் என்ன பாதிப்பு கொடுக்குமோ அதை இரண்டே கால் நாளில் சந்திரன் கொடுத்து விடுவார் என்கிறார்கள்.
அப்படியாக, இவ்வளவு கடினமான இந்த நாட்களில் நாம் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்களை பற்றி பார்ப்போம். எவ்வளவு முக்கியமான காரியம் என்றாலும் சந்திராஷ்டமம் காலத்தில் பிறருக்கு வாக்கு கொடுக்க கூடாது. போதுமானவரை புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்த்து விடலாம்.
அவசர தொலை தூர பயணத்தை காட்டிலும், தேவை இல்லாமல் தொலை தூர பயணம் மேற்கொள்வதை தவிர்க்கலாம். கண்டிப்பாக வண்டி வாகனத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.
அதே போல் வழக்கு தொடுப்பது, அறுவை சிகிச்சை செய்வது அன்றைய தினத்தில் செய்யாமல் இருப்பது நன்மை அளிக்கும். அன்றைய தினம் நம்முடைய மனதை இறைவன் மீது செலுத்தினால் ஆபத்துகளை தவிர்க்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |