ஜாதகத்தில் உங்களுக்கு எந்த தசா புத்தி நடக்கிறது? எந்த தெய்வத்தை வழிபாடு செய்யலாம்?

By Sakthi Raj Oct 11, 2026 07:38 AM GMT
Report

 ஜோதிட ரீதியாக ஒன்பது கிரகம் மற்றும் அவர்களுக்கு நடக்கக்கூடிய தசா புத்தி வைத்து தான் நாம் அந்த நபரின் வாழ்க்கையை கணித்துத்தெரிந்து கொள்கின்றோம்.

அந்த வகையில், ஜாதகத்தில் எந்த தசா புத்தி நடக்கிறதோ அதற்குரிய இறைவனை அவர்கள் வழிபாடு செய்கின்ற பொழுது வாழ்க்கையில் இருக்க கூடிய பிரச்சனைகள் யாவும் விலகுகிறது.

அப்படியாக, ஒருவருக்கு சூரிய திசை நடக்கிறது என்றால் அவர்கள் சிவ வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

ஜாதகத்தில் உங்களுக்கு எந்த தசா புத்தி நடக்கிறது? எந்த தெய்வத்தை வழிபாடு செய்யலாம்? | Which God To Worship Based On Dasha Buthi

குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் ராசி படி இதை செய்யுங்கள்

குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் ராசி படி இதை செய்யுங்கள்

சந்திரதிசை நடக்கிறது என்றால் அவர்கள் அம்பிகை வழிபாடு செய்வது அவர்களுக்கு தடைகள் யாவும் நீக்கி வெற்றியை கொடுக்கும்.

செவ்வாய் திசை நடப்பவர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்கின்ற பொழுது நல்ல முன்னேற்றம் இருக்கும்.

புதன் திசை நடப்பவர்கள் விஷ்ணு பகவான் வழிபாடு செய்வது அவர்களுடைய விருப்பங்களின் நிறைவேற்றிக் கொடுக்கும்.

குரு திசை நடப்பவர்கள் தென்முக கடவுள் வழிபாடு செய்வது ஒரு நல்ல திருப்திகரமான நிலையை கொடுக்கும்.

ஜாதகத்தில் உங்களுக்கு எந்த தசா புத்தி நடக்கிறது? எந்த தெய்வத்தை வழிபாடு செய்யலாம்? | Which God To Worship Based On Dasha Buthi

2026: நவராத்திரி முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை மற்றும் வழிபாட்டு முறை விபரங்கள்

2026: நவராத்திரி முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை மற்றும் வழிபாட்டு முறை விபரங்கள்

சுக்கிர திசை நடப்பவர்கள் சக்தி மற்றும் அபிராமி வழிபாடு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

சனி திசை நடப்பவர்கள் அனுமன் வழிபாடு செய்வது அவர்களுக்கு தடைகளை யாவையும் போக்கிக் கொடுக்கும்.

ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேது திசை நடப்பவர்கள் விநாயகரை வழிபாடு செய்வது ஒரு நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US