கருணை காட்டும் சனிபகவான்-2025ஆம் ஆண்டு யோகம் யாருக்கு?

Report

புத்தாண்டு இன்னும் சில நாட்களில் வர உள்ளது.2025 ஆம் ஆண்டு ஜோதிடத்தின் பார்வையில் மிகவும் சிறப்பு வாய்ந்த வருடமாக கருதப்படுகிறது.அதே போல் 2025ஆம் ஆண்டு சனி, ராகு, கேது உள்ளிட்ட பல சுப கிரகங்கள் தங்கள் வேகத்தை மாற்றப் போகின்றன.

அப்படியாக லட்சுமி தேவியின் அருள் படி ஒரு குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு எதிர்பாராத மாற்றமும் வீட்டில் மகிழ்ச்சியும் உருவாக போகிறது.அந்த வகையில் அதிர்ஷ்டம் பெற போகும் மூன்று ராசிகளை பற்றி பார்ப்போம்.

மேஷம்:

2025ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு பணத்தில் எந்த ஒரு தட்டுப்படும் ஏற்படாது.சுக்கிர பகவானின் அருளால் வசதியான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீடு பெரிய லாபத்தை பெற்று தரும்.புதிய வருடத்தில் லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் உங்கள் மீது எப்பொழுதும் இருக்கும்.தினசரி வருமானம் அதிகரிக்கும்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா?கெட்டதா?

இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா?கெட்டதா?

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு மிக பெரிய பொன்னான காலம் ஆகும்.நீங்கள் கடந்த வருடத்தில் சந்தித்த அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து மன நிம்மதியோடு வாழ்வீர்கள்.

லட்சுமி தேவியின் அருளால் உங்கள் வாழ்க்கையில் செல்வத்திற்கு இடையூறே இருக்காது.அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.வாங்கிய கடனை அடைக்கும் நேரம் வந்துவிட்டது.

கும்பம்:

சனி இந்த ராசியின் அதிபதி, சனியின் ராசி 2025 இல் மாறும். ஆதலால் சனியின் இந்த மாற்றம் உங்களுக்கு மிக பெரிய சாதகமாக அமைய போகிறது.சனி பகவானின் கருணை பார்வை இவர்கள் மீது விழும்.

அதே போல் செல்வத்தின் கிரகமான சுக்கிரனும் இந்த ராசிக்கு கருணை காட்டுவார்.மேலும் இவரின் அருளால் முன்பை விட நீங்கள் பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றத்தை அடைவீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US