தமிழ்நாட்டில் இறந்தவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்படும் அதிசய கோவில்

By Sakthi Raj Mar 08, 2026 05:33 AM GMT
Report

 நம்முடைய வீடுகளில் இறந்த முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் செய்வது வழக்கம். அதாவது அமாவாசை போன்ற நாட்களில் நாம் விரதம் இருந்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்வோம். ஆனால் பலரும் அறியாத மற்றும் வியப்பூட்டும் ஒரு வழக்கம் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சில கோவில்களை பின்பற்றப்பட்ட வருகிறது.

அதாவது இறந்தவர்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்யப்படுகின்ற கோவில் தமிழ்நாட்டில் உள்ளது. அதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக, நம் வீடுகளில் உயிருடன் இருப்பவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க கோவிலில் அவர்களுடைய பெயரில் அல்லது அவர்களுடைய ராசி நட்சத்திரத்தில் நாம் அர்ச்சனையை செய்வது வழக்கம்.

தமிழ்நாட்டில் இறந்தவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்படும் அதிசய கோவில் | Which Temple In Tamilnadu Do Archanas For Deceased

பிறரிடம் சண்டை போடுவது என்றால் இந்த ராசிகளுக்கு மிகவும் பிடிக்குமாம்

பிறரிடம் சண்டை போடுவது என்றால் இந்த ராசிகளுக்கு மிகவும் பிடிக்குமாம்

ஆனால் இறந்தவர்களுடைய ஆன்மா சாந்தி அடையவும் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கவும் அவர்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்யப்படுகின்ற கோவில் இருப்பது பலரும் அறிந்திடாத ஒன்றாக இருக்கிறது.

நாகப்பட்டினத்தில் பழமையான சிவாலயமாக காயாரோகணசாமி கோவில் இருக்கிறது. இங்கு இறந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் மோட்சம் அடைய அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்யப்படுகிறது.

மேலும், நம்முடைய ஊர்களில் நாம் கவனித்து தெரிந்து இருக்கும், அதாவது ஒருவர் இறந்து விட்டால் அங்கு அருகில் இருக்கக்கூடிய கோவில்கள் தற்காலிகமாக மூட ப்படுவது வழக்கமாக இருந்திருக்கும். ஆனால், இங்கு சற்று மாறாக ஒரு நடைமுறை உள்ளது.

அதாவது இறந்தவர்களின் உடலை கோவில் வாசலில் வைக்கப்பட்டதும் கோவில் சார்பாக அந்த உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதற்கு காரணம் என்னவென்றால் ஒரு மனிதனுடைய உடலில் இருந்து உயிர் பிரிந்து விட்டால் அவர்கள் இறைவனுடைய பிள்ளையாகி விடுகிறார்கள். அவருடைய அந்த பிறவியின் நோக்கம் முடிந்து விட்டது.

தமிழ்நாட்டில் இறந்தவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்படும் அதிசய கோவில் | Which Temple In Tamilnadu Do Archanas For Deceased

இந்த ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவிகளாக இருப்பார்களாம்

இந்த ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவிகளாக இருப்பார்களாம்

 

இப்போது அவருடைய ஆன்மா இறைவனின் அருளை அடையட்டும் என்ற கருணை உணர்வை வெளிப்படுத்தும் வகையான ஒரு ஆன்மீக மரபு என்று கூறப்படுகிறது. அதைப்போல், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக இருக்கிறது.

இங்கு பல ஊர்கள் மற்றும் நாடுகளில் இருந்து மக்கள் தங்களுடைய முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வதற்கு வருகை தருகிறார்கள். ஆனால் இங்கும் பலருக்கும் தெரியாது ஒரு மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. அதுதான் இறந்தவர்களின் பெயரில் அர்ச்சனை செய்யக்கூடிய அந்த வழக்கம்.

இங்கு செய்யப்படும் வழிபாடு முன்னோர்கள் சாந்தி அடைய உதவுவதாக பக்தர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். அதேபோல், கும்பகோணத்தில் இருக்கக்கூடிய திருவிடைமருதூர் பூமிநாதர் கோவிலிலும் முன்னோர்களுக்கான பரிகாரங்கள் செய்யக்கூடிய ஒரு சிறப்பு வாய்ந்த தலமாக இருக்கிறது.

இங்கு இறந்த முன்னோர்களுக்கு அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கம். இதனால் அவர்களுடைய பித்ரு சாபம் தோஷம் விலகி முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைப்பதாக நம்பிக்கை உள்ளது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US