2025 ஆம் ஆண்டு சாதனை பெண்களாக மாறும் பெண் ராசிகள் யார்?
வாழ்க்கை என்றாலே போரட்டம் தான்.அதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் அவர்கள் சாதிப்பதற்கு இன்னும் சற்று கடினமாக இருக்கும்.அப்படியாக இந்த 2025 ஆம் ஆண்டு எந்த பெண் ராசிகளுக்கு சாதிக்கும் யோகம் கிடைக்க போகிறது என்று பார்ப்போம்.
சுக்கிரன் பெயர்ச்சியானது பெண்களுக்கு ராஜயோகத்தை கொண்டு வந்து தர போகிறது.அதனால் நிதி நிலையில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, திருமண யோகத்தையும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தற்போது கும்ப ராசியில் பயணிக்கும் சுக்கிரன் வரும் 28ஆம் தேதி காலை 7.02 மணிக்கு மீன ராசிக்குள் நுழைவார்.இந்த வருடம் சுக்கிரன் 10 முறை தனது ராசியை மாற்றுகிறார்.தற்போது கும்பத்தில் இருக்கும் சுக்கிரன் யார் யாருக்கு என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
துலாம் ராசி பெண்கள்:
துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெறுவதால்,இந்த ராசி பெண்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்க போகிறது.வருமானம் உயரும்.உடல் ஆரோக்கியம் சீராகும்.உங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும்.வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.
கும்பம் ராசி பெண்கள்:
கும்பம் ராசி பெண்களுக்கு இது ஒரு பொன்னான காலம்.தன ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், நிதி நிலை நாளுக்கு நாள் மேம்படும். வீட்டில் சுபகாரியம் நடக்கும்.நீண்ட நாள் கைக்கு வராத பணம் வரும்.எதிர்பார்த்த இடத்தை அடைவீர்கள்.குழந்தை பாக்கியம் மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
கன்னி ராசி பெண்கள்:
கன்னி ராசி பெண்களுக்கு சிறந்த திருமண வரன் அமையும்.காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும்.ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வீர்கள்.விவாகரத்து ஆன பெண்களுக்கு இரண்டாவது திருமணம் சிறப்பாக நடக்கும்.வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.
மிதுனம் ராசி பெண்கள்:
மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் இந்த ராசிக்கு அரிய 'மால்வ்ய மகாபுருஷ யோகம்' கிடைக்கும். காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.எந்த துறையில் உங்கள் கால் வைத்தாலும் வெற்றி கிடைக்கும்.வியாபாரம் செய்யும் பெண்களுக்கு வெற்றிகரமாக அமையும்.
ரிஷபம் ராசி பெண்கள்:
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் இந்த ராசி பெண்களுக்கு செல்வம் பெருக வாய்ப்புள்ளது.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வீர்கள்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பமாக வெளிநாடு சுற்றுலா செல்லும் யோகம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |