உதவி செய்யவே பிறந்த ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் தனித்துவமான குணங்களிலும் எதிர்கால வாழ்க்கையிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் தோற்றமளிப்பார்கள்.
இவர்கள் தங்களுக்கு இல்லாத நிலையிலும் இவர்களிடம் உதவி கேட்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட போற்றத்தக்க குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் : ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே விசுவாசமும் நம்பகத்தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், சமூக சேவைகளில் ஈடுப்படுவதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் அன்பு, ஆறுதல் மற்றும் பாதுகாப்பைப் பற்றியது. அவர்கள் தாங்கள் நேசிப்பவர்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இயல்பான உள்ளுணர்வைக் கொண்டுள்ளனர்.
இவர்களிடம் உதவி என்று கேட்டுவிட்டால் எப்படியாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இந்த ராசியினர் இயல்பாகவே மிகவும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கன்னி : கன்னி ராசியினர் பகுப்பாய்வு மனப்பான்மை மற்றும் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் மிகவும் சேவை சார்ந்த மனபாங்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்கள் உதவி என்று கேட்காமலேயே அவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு உதவி செய்யும் குணம் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
இவர்களின் இந்த குணத்தை மற்றவர்கள் பெரும்பாலான நேரங்களில் உபயோகித்துக்கொள்ள அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. இருப்பினும் இவர்கள் உதவி செய்யும் குணத்தை வாழ்க்கை முழுவதும் விடவே மாட்டார்கள்.
துலாம்: அன்பு மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம், நல்லிணக்கம் மற்றும் சமநிலைக்கு பெயர் பெற்றது. இந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்கள்.
இவர்கள் அனைவரும் ஒத்துழைக்கும் ஒரு உலகத்தை உருவாக்க பாடுபடும் இயற்கையான அமைதியை உருவாக்குபவர்கள். அவர்கள் எப்போதும் மோதல்களுக்கு மத்தியஸ்தம் செய்ய உதவவும், நியாயமான கண்ணோட்டத்தை கொண்டிருப்பார்கள்.
சமூக சேவையில் இவர்களிளுக்கு அதிக ஆர்வம் இருக்கும். எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை இவர்கள் பிறப்பிலேயே கொண்டிருப்பார்கள்.