பிப்ரவரி 7 முதல் கோடீஸ்வர யோகங்களை பெற போகும் 4 ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, பிப்ரவரி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் மிகவும் சிறப்பாக இருக்கிறது.அதாவது பிப்ரவரி 7, வெள்ளிக்கிழமை அன்று கிரகங்களின் சிறப்பான சேர்க்கையால் பல முக்கியமான நிகழ்வுகள் நடக்க இருக்கிறது.இந்த நாளில் மூன்று சக்தி வாய்ந்த கிரகங்கள் சிறப்பாக செயல்படவுள்ளது.
இந்த தாக்கம் 12 ராசிகளுக்கும் பிரதிபலிக்கும்.அப்படியாக பிப்ரவரி 7 அன்று பிற்பகல் 2.58 மணிக்கு, சூரியனும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் 150 டிகிரியில் அமையும் நிலையில் 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் பெறப்போகிறார்கள்.அவர்கள் யார் என்று பார்க்கலாம்.
மகரம்:
புதன் மற்றும் செவ்வாயின் தாக்கம் மகர ராசிக்காரர்களுக்கு மிக பெரிய தாக்கத்தை கொண்டு வரும்.குடும்பம் மற்றும் நிதி நிலையில் இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.உடல்நிலையில் நல்ல ஆரோக்கியம் தென்படும்.சிலர் பிரச்சனைகள் விலகி மன அமைதியை பெறுவார்கள்.
விருச்சிகம்:
செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது.இந்த நேரத்தில் புதிய சொத்துக்கள் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும்.
மேஷம்:
சூரியன் மற்றும் செவ்வாயின் சிறப்பான அருளால் மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்க போகிறது.தொழிலில் உண்டான தொந்தரவுகள் படிப்படியாக குறையும்.கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் இருக்கும்.சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும்.
சிம்மம்:
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் சமுதாயத்தில் மதிப்பும் உயர்வும் கிடைக்கும்.அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.பலருக்கும் வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.காதலிப்பவர்களுக்கு இது திருமணம் செய்ய சாதகமான நாள் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |