2வது திருமணம் அமைப்பு கொண்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

By Sakthi Raj Nov 21, 2024 10:07 AM GMT
Report

வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று.சில ஜாதகத்தின் படி அவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் முதல் திருமணம் அவர்களுக்கு வெற்றி கரமாக அமைவது இல்லை.அவர்கள் சரியான முறையில் நடந்து கொண்டாலும் கிரக சூழ்நிலை அவர்களை இரண்டாம் திருமணம் நோக்கி தான் கொண்டு செல்லும்.

இவை நாம் பொதுவாக அவர்களின் ராசியை வைத்தும் கணித்து விடலாம்.அப்படியாக ஜோதிடத்தின் அடைப்படையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமண அமையும் என்று பார்ப்போம்.

தனுசு ராசி:

தனுசு ராசிக்காரர்கள் ஒரு சுதந்திர பறவை என்றே சொல்லலாம்.அவர்களுக்கு அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிடிக்காது.அவர்கள் தனிமை விரும்பிகள் என்றும் சொல்லலாம்.மேலும் தனுசு ராசி காரர்கள் அவர்கள் வீட்டிலும் மிகவும் செல்லமாக வளர்ந்து இருப்பார்கள்.தனுசு ராசியில் பிறந்த ஆண் பெண் அவர்கள் யாரை திருமணம் செய்தாலும் அவர்களை சுதந்திரமாக விடுவது தான் அவர்களுக்கு பிடித்த விஷயம்.இல்லை என்றால் வீட்டில் சண்டைகள் நேரிடலாம்.

நாளை வீட்டில் செய்ய வேண்டிய கார்த்திகை முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு

நாளை வீட்டில் செய்ய வேண்டிய கார்த்திகை முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு

ரிஷப ராசி:

ரிஷப ராசிக்காரர்கள் உறவுகளில் மிகுந்த மரியாதையும் எதிர்பார்ப்புகளும் வைப்பவர்கள்.அவ்வாறு அவர்களின் வாழ்க்கை துணை அமையவில்லை என்றாலும் அவர்கள் பிரிந்து செல்ல வாய்ப்புகள் உள்ளது.ஆதலால் இவர்களுக்கு அமைய இருக்கும் ஆண் பெண் இருவரும் ரிஷா ராசியினர் விருப்பத்தை நிறைவேற்றி கொள்ளும் படி நடப்பது அவசியம்.

விருச்சிக ராசி:

விருச்சிக ராசிக்காரர்கள் சுயநலவாதிகள் என்றே சொல்லலாம்.எதிர் தரப்பினர் நடந்து கொள்வதை வைத்து தான் அவர்கள் பிறருக்கு மரியாதையை கொடுப்பார்கள்.விருச்சிக ராசிகாரர்கள் உணர்வுகளை பூர்த்தி செய்வது மிகவும் கடினம்.ஆதலால் அது பூர்த்தி ஆகவில்லை என்றால் மிகவும் எளிதாக அவர்கள் உறவை முடித்து கொள்வார்கள்.

துலாம் ராசி:

துலாம் ராசிக்காரர்கள் யாராக இருந்தாலும் அந்த உறவில் சுயமரியாதை மிகவும் எதிர்பார்ப்பார்கள்.அவர்கள் பிறரை மிகவும் அனுசரித்து சென்றாலும் ஒரு கட்டம் மேல் அது அவர்களுக்கு தங்களை இழப்பது போல் உணர்வு உண்டாக்கினால் அவர்கள் அந்த உறவில் இருப்பது இல்லை.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US