ஜோதிடம்: காதலித்து திருமணம் செய்தாலும் ஏன் விவாகரித்து வரை செல்கிறது...
நாம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் பார்த்திருப்போம். பல வருடம் காதலித்து திருமணம் செய்து இருந்தாலும் திடீர் என்று அவர்கள் விவாகரத்து வரை சென்று விடுவார்கள். இது காதலில் மட்டும் இல்லை பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் நிகழ்வுகளும் இன்றைய சூழலில் கோர்ட் வாசல் வரை சென்று விடுகிறது.
அப்படியாக, ஜோதிட ரீதியாக யாருக்கு விவாகரத்து வரை செல்லும் அமைப்பு உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம். ஒன்பது கிரகங்களில் சுக்கிரன் தான் காதலுக்கு உரிய கிரகம் ஆகும்.
அதன் நிலை மற்றும் மற்ற கிரகங்களின் நிலையானது (கேது, செவ்வாய், ராகு, புதன், சனி) எந்த அளவிற்கு பாதிப்பில் உள்ளது என்பது ஆராய்வது அவசியம்.
விருச்சிகம், கடகம் மற்றும் ரிஷபம் ராசிகளுக்கு ஏழாம் வீட்டு அதிபதி மற்றும் சுக்கிரன் அமைப்பு இவர்களுக்கு திருமண வாழ்வில் சில கசப்புகளை கொடுக்கிறது.

மற்ற கிரகம் பொறுத்தவரை ராகு தீவிரமான ஈர்ப்பை கொடுக்கலாம், அதோடு கேது ஒருதுவித பற்றின்மையை உருவாக்கும். குறிப்பாக செவ்வாய் திசை அல்லது அதனுடைய தாக்கமும் சட்ட ரீதியான சில முக்கிய சிக்கல்களை கொடுக்கும்.
மேலும், ஒருவருக்கு இரண்டாது திருமணம் என்று பார்க்கும் பொழுது 11 ஆம் வீட்டை நாம் ஆராய வேண்டியது அவசியம்.
அங்கு ஏதேனும் அசுப கிரகம் இருந்தாலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அதோடு, குறிப்பாக ஒருவர் ஜாதகத்தில் 3ஆம் வீடு என்பது ஒருவர் எப்படி முடிவு எடுப்பார் என்பதை பற்றி குறிக்கக்கூடியதாகும்.
அங்கு சனி அல்லது செவ்வாய் இருந்தால் திருமண முடிவுகளில் நிச்சயம் முடிவு எடுக்கும் பொழுதும் சில தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அப்படியாக, யாருக்கு திருமண வாழ்வில் சிக்கல் வரும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |