வாராஹி அம்மனை யார் எல்லாம் வழிபாடு செய்யலாம்?
வாராஹி அம்மன் வழிபாடு தற்பொழுது அதிக அளவில் காணப்படுகிறது. வாராஹி அம்மன் பலரின் துயர் துடைப்பவளாக இருக்கிறாள். வாராஹி அம்மன் சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படுபவர்.
இவர் வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பன்றியின் முகம், பெண்ணின் உடல் கொண்டவளாக இருக்கிறார் வாராஹி. வாராஹி அம்மன் உக்கிரமான தெய்வமாக என்பதால் அவ்வளவு எளிதாக இவளை நெருங்கி வழிபாடு செய்ய முடியாது.
வாராஹி அம்மனின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே அவளை நெருங்க முடியும். மேலும், வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபாடு செய்யவேண்டும் என்றால் நம் வீடு சுத்தமாக இருக்கவேண்டும்.
அதே போல், நம்முடைய மனமும் நல்ல தூய்மையாக இருந்தால் மட்டுமே வாராஹி அம்மன் சிலை அல்லது படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய அனுமதி கொடுப்பாள். இல்லையென்றால் அவர்கள் வீடுகளில் பல சிக்கல்களை சந்திக்க கூடும்.
அதே போல், சுத்தமான மனம் கொண்டு வாராஹி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு அம்மன் கருணை காண்பித்து நல்வழி காட்டுகிறாள். வாராஹி அம்மனுக்கு பல இடங்களில் கோயில்கள் இருந்தாலும், தஞ்சை பெரிய கோவிலிலும் காசியிலும் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
எந்த கோயிலிலும் முதலில் விநாயகருக்குத்தான் பூஜை செய்வார்கள். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் வாராஹிக்கு முதலில் பூஜை செய்யப்படுகிறது. இவ்வளவு சக்தி வாய்ந்த வாராஹி அம்மனின் சிலை அல்லது படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய விரும்பினால் வடக்கு நோக்கி வைக்க வேண்டும்.
கண்டிப்பாக அம்மனுக்கு வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். நம்மால் முடிந்த நைவேத்தியம் படைத்து வழிபாடு மிகவும் அவசியமானதாகும். மேலும், கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே வாராஹி அம்மனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அது போல் மகரம், கும்ப ராசிக்காரர்களும் வாராஹி அம்மனை வழிபாடு செய்யலாம். அதே போல் வாராஹி அம்மனை வழிபட உகந்த நாளாக பஞ்சமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளில் இருக்கிறது.
அன்றைய தினம் வாராஹி அஅம்மனை வழிபாடு செய்தல் அம்மனின் முழு அருளை பெறலாம் என்கிறார்கள். நீண்ட நாள் பொருளாதார பிரச்சனை உள்ளவர்கள் வாராஹி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வழிபாடு செய்தல் அம்மனின் அருளால் நல்ல நிதி உதவி கிடைக்கும்.
அவர்கள் தேய்ப்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வாராஹியை வழி மிக சிறந்த பலனை பெறலாம் என்கிறார்கள்.மேலும் குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் விலகி வளம் பெறுக வாராஹி அம்மனை வளர்பிறை பஞ்சமி நாளில் வழிபாடு செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |