ராமாயணம்:பலரும் அறிந்திடாத ஊர்மிளாவின் தியாகம்

By Sakthi Raj Jan 21, 2025 07:25 AM GMT
Report

ஒரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் அவனுக்கு நெருங்கிய ஒருவரின் மிக பெரிய அன்பும் தியாகமும் நிறைந்து இருக்கும்.அதாவது,யாரோ ஒருவர் நம் மீது வைத்திருக்கும் பிடிவாதமான காதலும்,அவர்கள் நம் மீது கொண்டு உள்ள நம்பிக்கையும் தான் நம்மை எப்படியாவது ஒரு இலக்கை அடைந்து ஜெயிக்க வைத்திருக்கும்.

அப்படியாக மனிதனுக்கு மிக பெரிய வாழ்க்கை பாடமாக அமைந்த இராமாயணத்தில் நாம் பலரை பற்றி பேசி இருப்போம்,வியந்து இருப்போம்.ஆனால் இந்த ஒரு நபரின் அசைக்கமுடியாத காதலாலும்,மனம் தளராத நம்பிக்கையாலும் தான் ராமர் போரில் வெற்றி அடைந்தார் என்பதை பற்றி நாம் சிந்திக்க தவறி விட்டோம்.

அவ்வாறு ராமாயண போரில் வெற்றி பெற மிக பெரிய காரணமாக அமைந்த பெண் அவள் யார்?என்று பார்ப்போம்.

ராமாயணம்:பலரும் அறிந்திடாத ஊர்மிளாவின் தியாகம் | Who Is Behind Raman Vetri In Ramayanam

ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமாக ராமரும் சீதையும் இருக்கிறாரகள்.ஆனால் அவர்கள் வனவாசம் சென்று போரில் வெற்றி பெற பதினான்கு ஆண்டுகள் வெறும் உறக்கம் மட்டுமே கொண்டு தவம் செய்தவள் தான் ராமனின் தம்பி லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளா.

ராமன்,சீதை,லக்ஷ்மணன் இவர்கள் வனத்திற்கு செல்லவேண்டும் என்று கிளம்பி கொண்டு இருந்த வேளையில் எதை பற்றியும் சிந்திக்காமல் ஊர்மிளா ராஜ அலங்காரம் செய்துக்கொண்டு வந்து நிற்கிறாள் என்று தான் லக்ஷ்மணன் எண்ணினான்.

ஆனால்,அவளோ தன்னை விட்டு வனவாசம் செல்லும் கணவனுக்கு ஒரு பொழுதும் தன் நினைப்பு வந்து,அவர் அண்ணனையும் அண்ணியையும் காக்கும் கடமையில் இருந்து தவறி விடக்கூடாது என்று எண்ணிய ஊர்மிளா,கணவன் அவள் மீது வெறுப்பும் கோபம் கொள்ளுபடியாக தன்னை அலங்கரித்து கொண்டு வந்து நின்றாள்.

நாய்க்கு உணவு அளித்ததால் வயிற்று வலி சரியான அதிசயம்

நாய்க்கு உணவு அளித்ததால் வயிற்று வலி சரியான அதிசயம்

அதோடு நிறுத்தாமல் வனவாசம் செல்லும் தன் கணவன் பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடியும் தூங்காமல் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக தூக்கத்தின் கடவுளான நித்திராதேவியிடம் வேண்டினாள்.ஆனால், நித்திராதேவி ஊர்மிளா கேட்ட வரத்தை கொடுக்க மறுத்து விட்டாள்.

இருந்தாலும்,ஊர்மிளா விடாப்பிடியாக தான் கணவன் எந்த நொடியிலும் எந்த தவறும் செய்து விடக்கூடாது,ராமனையும் சீதையும் பாதுகாக்க தவறிவிடக்கூடாது என்று லக்ஷ்மணின் தூக்கத்தையும் சேர்த்து தானே தூங்கும் வரத்தை நித்ராதேவியிடம் பெற்றுக்கொண்டாள். மேலும்,ராவணனின் மகன் இந்திரஜித் வீரத்தில் சிறந்து விளங்குபவனை எவராலும் எளிதில் முறியடித்து விட முடியாது.

ராமாயணம்:பலரும் அறிந்திடாத ஊர்மிளாவின் தியாகம் | Who Is Behind Raman Vetri In Ramayanam

காரணம்,எவன் ஒருவன் பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனுடைய கைகளாலே இந்திரஜித்தின் மரணம் நிகழும்’ என்ற வரத்தை பெற்றிருந்தான்.ஆக ஊர்மிளா தன் கணவனின் 14 வருட கால தூக்கத்தை அவள் பெற்று கொண்டதால் தான் அவனால் எளிதாக இந்திரஜித்தை வீழ்த்தமுடிந்தது.

ஊர்மிளா தன் கணவனுக்காகவும் அவளின் குடும்பத்திற்காகவும் செய்த தியாகங்களே ராமர் போரில் வெற்றி பெற முக்கியமான காரணமாக அமையப்பெற்றது.

என்னதான் ராமர் விஷ்ணுவின் அவதாரம், சீதை லக்ஷ்மிதேவியின் அவதாரம், லக்ஷ்மணன் ஆதிசேஷனின் அவதாரமாக இருந்தாலும் அவர்கள் கடமையாக செய்த தியாகம் கடந்து மனித பிறவியான ஊர்மிளா தன் கணவன் மீது வைத்துள்ள தீராத காதலால் அவனுக்காக அவள் சிறிதும் தயங்காமல் செய்த சில விஷயங்கள் தான் மிக பெரியதாகும்.ஆக மனிதனின் அன்பிற்கும் அவன் நம்பிக்கைக்கும் எப்பொழுதும் வெற்றிகள் நிச்சயம்.

ஜெய் ஸ்ரீ ராம்       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US