ஒரு மனிதனின் முதல் எதிரி யார்?
ஒரு மனிதனுக்கு துன்பம் எவ்வளவு இயல்பானதோ அதே போல் எதிரிகளும் இயல்பாகவே இருக்கிறார்கள்.அதாவது எப்பொழுது ஒரு மனிதனுக்கு "தான்"என்ற அகங்காரம் எட்டி பார்கிறதோ கூடவே எதிரிகளையும் அது அழைத்து வந்து விடுகிறது.
இருந்தாலும் கொஞ்சம் அமர்ந்து யோசித்தால் பிரச்சனைகள் எங்கு இருந்து தொடக்குகிறது என்று பார்த்தால் மனிதன் அவன் மனதில் தோன்றும் விருப்பு,வெறுப்பு,ஆணவம் பொறாமை,ஆசை இவைகளால் மட்டுமே.ஆக இந்த குணங்கள் இருந்தால் ஒரு மனிதனே அவனுக்கு முதல் எதிரி ஆகின்றான்.
இவை எல்லாம் எவன் ஒருவன் ஜெய்கின்றானோ அப்பொழுது தான் அவன் கடவுளை நெருங்க முடியும்.அப்படியாக நமக்கு எதிரிகள் தொல்லை இல்லாமல் இருக்கவும்,மனதில் உள்ள தீய குணங்கள் விலகும் நாம் ராமானுஜர் எழுதிய இந்த பாடலை படிக்க நம் வம்சத்திற்கே எதிரிகள் இருப்பது இல்லை.
பற்பமென திகழ் பைங்கழலுன்றன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துரவாடை பதிந்த மருங்கழகும்
முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடும் மொழிகள் நிறைந்திடும் முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற் சிகைமுடியும்
எப்பொதுழும் எதிராசன் வடிவழகு என்னிதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.