உங்கள் ராசிப்படி கஷ்டமான நேரத்தில் உங்களுடன் இருப்பவர் யார் தெரியுமா ?
இந்த பூமியில் எந்த உயிரினமாக பிறந்து விட்டாலும் கஷ்ட காலம் என்பதை நாம் சந்தித்தாக வேண்டிய நிலையாக இருக்கிறது. அப்படியாக 12 ராசிகள் படி ஒருவருடைய கஷ்ட காலங்களில் எந்த உறவு அவர்களுடன் துணையாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியின் அடிப்படையில் இவர்களுக்கு எத்தனை உறவுகள் இவர்களை சுற்றி இருந்தாலும் இவர்களுடைய தாய் தான் எல்லா நேரங்களிலும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடியவர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு எத்தனை சொந்தங்கள் வந்து சென்றாலும் இவர்களுடைய வாழ்க்கை துணை தான் நிலையானவர்களாக இவர்களுடன் துணை இருப்பார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினரை முழுமையாக நம்பி எப்பொழுதும் அவர்களுக்கு ஆதரவை வழங்க கூடியவர்கள் அவர்களின் தாய்.
கடகம்:
கடக ராசியினருக்கு கஷ்டமான காலங்களில் இவர்கள் உடன் பிறந்தவர்கள் தான் இவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருப்பார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இவர்களுடைய தாய் தான் இவர்களுடைய பலமாக இருக்கிறார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இவர்களுடைய வாழ்க்கை துணை தான் இவர்களுக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கக்கூடியவர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இவர்களுக்கு எப்பொழுதும் ஆதரவை வழங்கக்கூடிய ஒரு நபர் இவர்களின் தந்தை.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இவர்களுடைய தாய் மற்றும் வாழ்க்கை துணை இருவரும் இவர்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு அம்மா மற்றும் இவர்களுடைய வாழ்க்கை துணை தான் இரு கண்களாக இருந்து இவர்களை கரை சேர்க்கக்கூடியவர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் இவர்களுடைய வாழ்க்கை துணை தான் இவர்களுக்கு எப்பொழுதும் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இவர்களுடைய பெற்றோர்கள் தான் இவர்களுக்கு எந்த நிலையிலும் உடன் இருந்து இவர்களுக்காக ஆதரவு கொடுப்பவர்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இவர்களுடைய மனைவியும் பெண் பிள்ளையும் தான் இவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்க கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |