சிவபெருமானுக்கு வில்வ இலை சமர்ப்பிப்பதற்கான காரணம் என்ன?
சிவன் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் அழித்தல் தொழிலைச் செய்யும் கடவுள் மற்றும் சைவசமயத்தின் உச்சக்கட்ட முழுமுதற் கடவுள் ஆவார்.
இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை ஆற்றுபவர் மற்றும் யோகக்கலைக்கு ஆதிகுருவாகக் கருதப்படுகிறார்.
இந்நிலையில், சிவபெருமானின் வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வில்வ இலை சமர்ப்பித்தால் சிவ பூஜை முழுமை பெறும் என்று நம்பப்படுகிறது.

மூன்று இதழ்கள் கொண்ட வில்வம், சிவனின் திரிசூலம் மற்றும் இச்சா, கிரியா, ஞான சக்திகளை குறிக்கிறது.
மேலும், ஒரு வில்வ இலை சமர்ப்பித்தால் மூன்று ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
வில்வம் சிவனின் மூன்றுக் கண்கள் மற்றும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் குறிக்கிறது.

ஸ்ரீ விருட்சம் என்று அழைக்கப்படும் வில்வ மரம் மகாலட்சுமி தோன்றியபோது அவளின் கரங்களில் இருந்து வில்வ மரம் உருவானது என்று புராணங்கள் கூறுகின்றன.
வீட்டில் வில்வ மரம் வளர்த்தாலும், தினமும் தண்ணீர் ஊற்றினாலும் செல்வ வளம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
அதேபோல், மகா சிவராத்திரி அன்று வில்வம் கொண்டு சிவனை வழிபட்டால் பெரிய புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |