சாணக்கிய நீதி: இந்த நபர்களை அவமதித்தால் தீராத சாபம் ஏற்படும்... தவறியும் செய்திடாதீங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக வாழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவர் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி. இன்றும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.
சாணக்கிய நீதி சாஸ்திரத்தின் அடிப்படையில் வாழ்வில் ஒருபோதும் இவற்றை அவமதித்துவிட கூடாது. இப்படி செய்துவிட்டால் பெரும் பாவத்துக்கு ஆளாவதுடன் வாழ்வில் முன்னேற்றம் அடையவவே முடியாதளவு சாபத்தை பெற்றுவிடுவார்கள். அப்படி அவமதிக்க கூடாத விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
நெருப்பு
இந்து மதத்டதின் அடிப்படையில் பஞ்ச பூதங்களில் ஒருவரான நெருப்பு, அக்னி கடவுளாக வணங்கப்படுகின்றது. பஞ்ச பூதங்களின் உதவியின்றி மனிதர்களினால் பூமியில் வாழவே முடியாது. நெருப்பை மிதிப்பது அல்லது நெருப்பில் எச்சில் உமிழ்வது போன்றன மாபெரும் பாவமாக கருதப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் வாழ்வில் தீராத கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.
குரு
குரு என்பவர் ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமானவர் அத்தகைய ஆசிரியரை நீங்கள் ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. அவர்களை மதித்து அவர்களின் ஆசியைப் பெற வேண்டும். குருவின் ஆசீர்வாதம் யாருக்கெல்லாம் கிடைக்கின்றதோ அவர்கள் வாழ்வில் உச்சத்தை அடைவார்கள். அதுபோல் சாபத்தை பெற்றால் இது வாழ்க்கையையே பாழாக்கிவிடும்.
கன்னிப்பெண்
சாஸ்திரங்களின் அடிப்படையில் கன்னிப் பெண்கள் தெய்வமாக பார்க்கப்படுகின்றார்கள். வாழ்வில் எப்போதும் மகிழ்சிசியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பெண்களை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. மேலும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இப்படியான செயலை செய்பவர்கள் வாழக்கையில் பெரும் பாவத்தை சம்பாதிக்கின்றார்கள். இது அவர்களின் பரம்பரையையே பாதிக்கக் கூடியது.
முதியவர்கள்
முதியவர்களை எப்போதும் மதித்து நடக்க வேண்டும் இவர்கள் வீட்டின் ஆணிவேர் போன்றவர்கள். அவர்களை ஒருபோதும் அவமதிக்கும் வகையில் நடந்துக்கொள்ளவே கூடாது. அதனால் வாழ்வில் ஒருபோதும் முன்னேற்றம் அடையவே முடியாத அளவுக்கு சாபம் கிடைத்துவிடும்.
பசுமாடு
இந்து மதத்தில் பசுவை கோமாதாவாக வணங்குகின்றார்கள். முப்பத்து முக்கோடி கடவுள்களின் இருப்பிடமாக பசு பார்க்கப்படுவதனால் இதனை அவமதிப்பது பெரும் பாவமாக கருதப்படுகிறது. பசுவை அவமதித்தவர்கள் வாழ்வில் ஒருபோதும் செல்வம் நிலைக்காது என்பது ஐதீகம்.