கடவுள்கள் கையில் ஆயுதங்கள் இருப்பது ஏன்?
சிவன் முதல் முருகன், விநாயகர், பெருமாள், துர்கை என நாம் வணங்கும் அத்தனை கடவுள்களும் நம்மை காக்க தானே உள்ளனர்? அப்படியானால் அவர்களுக்கு ஆயுதம் எதற்கு? இந்த ஆயுதங்களை அவர்களுக்கு கொடுத்தது யார்?
இதற்கான பதில் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள மெய்வழி சாலையில் கிடைக்கும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை இது தான்!! அவர்களின் ஆண்டவர் கூறிய படி, நாம் வழிபடும் கடவுள்கள் கையில் இருப்பது ஆயுதங்கள் இல்லை.
அதற்கு சன்னதங்கள் என்று பெயர் அது என்ன சன்னதம்? முதல் வகுப்பில் படிக்க சேர்ந்து 10th, 12th முடித்து பின் கல்லூரி படித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறை சார்ந்து படித்து அதில் தேர்ச்சி அடைந்ததன் அடையாளமாக பட்டம் வாங்குகிறோம்.
அதுபோலவே தீவிரமாக தவம் செய்து அவர்களின் தவ பலன்கள் அடிப்படையில் அவர்கள் சென்ற நிலையின் அடிப்படையிலும் அவர்களுக்கு அனைத்தையும் உருவாக்கிய இந்த பேராற்றல் மிக்க பிரபஞ்சத்தால் கிடைக்கப்படிவதே சன்னதங்கள் Doctor Strange என்றொரு படம் உண்டு.
அதில் இதுபோல நிறைய சன்னதங்கள் காட்டப்பட்டு இருக்கும் இதை எப்படி பயன்படுத்துவது என அந்த நாயகன் கேட்க, அந்த பொருட்கள் நம்மை தேர்ந்தெடுக்கும் அப்போது தான் அதை பயன்படுத்த முடியும் என்று கூறுவார்கள்.
அப்படித்தான் கதாநாயகனை ஒரு சிவப்பு பறக்கும் அங்கி தேர்ந்தெடுக்கும், இது போல தான் இந்த சன்னதங்களும் ஒவ்வொரு கடவுளும் ஒரு தத்துவத்தை நமக்கு சொல்லவே இந்த பூமிக்கு வந்தனர் அவர்கள் தவ சக்தியின் அடிப்படையில் சன்னதங்கள் கிடைக்கப்பெற்று மக்களை வழிநடத்தினார்.
ஆனால், நாம் அதன் அர்த்தங்கள் அறியாமலேயே கண்மூடித்தனமாக வழிபாடு செய்து கொண்டு இருக்கிறோம் ஒவ்வொரு சன்னதத்திர்க்கும் ஒவ்வொரு சிறப்பு பண்பும் சக்தியும் உண்டு, அதனை பற்றி தெளிவாக பார்க்க இந்த காணொளி உங்களுக்கு உதவும். இது குறித்த சந்தேகங்களை இந்த காணொளியின் Comment Box ல் பதிவிடுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |