காளி தேவி சிவனை தன் காலால் மிதிப்பது ஏன் தெரியுமா?
காளி தேவி சிவனை தான் காலால் மிதிப்பது போல் பல புகைப்படங்களில் காட்சியளிப்பார்.
இப்படி கடும் கோபத்துடன் சிவனை ஏன் தன் கால்கலால் காளி தேவி மிதிக்கிறாள் என்று தெரிந்துகொள்வோம்.
ஒரு சமயம் ரக்தபீஜா என்னும் அரக்கன் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்து தன் ஒரு துளி இரத்தம் சிந்தினால் தன்னுடைய பலம் பல ஆயிரம் மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற வரத்தை பெறுகிறான்.
பிறகு தன்னை அழிக்க யாருமில்லை என்ற ஆணவத்தில் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்துகிறான்.
ரக்தபீஜாவை அழிக்க துர்கா தேவி தன்னுடைய வாளை வீசியதால் அவனுடைய ஒரு துளி இரத்தம் தரையில் விழுந்ததும், அவனுடைய ஆயிரம் வடிவங்கள் வெளிப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த துர்கா தேவி மஹாகாளியாக அவதாரம் எடுத்து, அனைத்து அரக்கர்களையும் கொன்று அவர்களின் இரத்தம் தரையில் சிந்தாதவாறு அனைத்தையும் குடிக்கிறாள்.
இதனால் உக்கிரமான காளி தேவி ஆவேச நடனமாட தொடங்குகிறாள். அவள் கால் வைக்கும் இடமெல்லாம் அழிவு ஏற்படுகிறது.
உலகத்தை அழிவிலிருந்து காக்க சிவபெருமான் காளி தேவி வரும் பாதையில் சென்று படுத்துக்கொள்கிறார்.
காளி தேவியின் பாதம் சிவபெருமான் மீது பட்டதுமே ஆக்ரோஷமாக இருந்த காளி தேவி இயல்பு நிலைக்கு வருகிறார்.
தன்னுடைய காலுக்குக் கீழே இருப்பது தனது கணவன் என்று தெரிந்ததுமே வருத்தப்பட்டு சிவபெருமான் மீது இருக்கும் தனது பாதத்தை எடுக்கிறாள் காளி தேவி.
இப்படி, காளி தேவியின் கோபத்தைத் தணிக்கத்தான் சிவபெருமான் காளி தேவியின் காலடியில் வந்து படுத்ததாக ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |