இனி பெருமாள் கோயிலுக்கு சென்றால் இந்த தவறை செய்து விடாதீர்கள்
செல்வத்திற்கு அதிபதியாகவும் ஒரு மனிதன் வாழ்வில் மகிழ்ச்சியை அருளிசெய்பவராகவும் இருக்கிறார் மகாலட்சுமி தாயார். இவர் எப்பொழுதுமே பெருமாளுடன் இணைந்து இருக்கும் பொழுது பெருமாளின் பாதங்களை பிடித்தபடி அமர்ந்திருப்பது போல் காட்சி தருவார்.
பிற தெய்வங்களை போல் அபயகஸ்த முத்திரை காட்டி மகாலட்சுமி காட்சி தருவது மிகவும் அரிதாகவே இருக்கிறது. மேலும், பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் ஆலயங்கள் அனைத்துமே மகாலட்சுமி தாயார் அவருடைய திருவடிகளை பிடித்தபடியே நமக்கு காட்சி கொடுப்பார்.
பெருமாள் நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்த நிலையிலோ காட்சி தரும் ஆலயங்களில் மட்டும் மகாலட்சுமி பல்வேறு திரு நாமங்களில் தனி சன்னதியில் இருந்து நம்மளுக்கு அருள் செய்கிறாள். அதோடு திருப்பாற்கடலில் மகாலட்சுமி தாயார் மகாவிஷ்ணுவின் பாதங்களை எப்பொழுதும் பிடித்தபடியே அமர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பெருமாள் மகாலட்சுமி தவிர வேற எந்த தெய்வங்களையும் நாம் இதுபோன்று கோலத்தில் பார்க்க முடியாது. ஏன் மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் இந்தக் கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார்கள்? இதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்னவென்று பார்ப்போம்.
இந்த உலகத்தில் எத்தனை உறவுகள் இருந்தாலும் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் உன்னதமான புனிதமான உறவாகும். அந்த உறவில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது தான் அந்த உறவின் சிறப்பாகும்.
அந்த வகையில் தான் திருப்பாற்கடலில் வீற்றிருக்கும் மகாவிஷ்ணுவின் காலை அவரது மனைவி மகாலட்சுமி பிடித்திருப்பது போல் கோவில்களிலும் சிற்பங்களிலும் உருவப்படங்களிலும் நாம் பார்க்கிறோம்.
அப்படியாக மகாவிஷ்ணுவும் மகாலட்சுமி தேவியும் ஒரு அற்புதமான தம்பதிகளாக இருக்கிறார்கள். மேலும் எந்த ஒரு மனைவி கணவனின் காலை பற்றி விடுகிறார்களோ அந்த குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள், மகிழ்ச்சி இவை அனைத்தும் குறையாமல் சேருமாம்.
மேலும் ஆண்களின் முட்டிபாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனி கிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகிறது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.
ஆக ஆண்களின் முட்டிப்பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி சனி கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் படும் பொழுது ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக சேர்ந்து பெரிய அளவில் செல்வந்தராக கூடிய வாய்ப்புகள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான மகாலட்சுமிதேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் பிற ஓவியங்களை நாம் பார்த்து வருகிறோம். மேலும் ஜோதிட ரீதியாக சனி பகவான் ஒருவருடைய நன்மை தீமைகளுக்கு ஏற்ப அவருக்கு துன்பம் வழங்கக்கூடியவர்.
சுக்கிர பகவான் தான் ஒருவருடைய மன மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் சுகபோக வாழ்க்கைக்கும் காரணியாக இருக்கிறார். ஆதலால் சனியின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருப்பதற்காக மகாலட்சுமி சுக்கிரன் அதிகம் செலுத்தும் கைகளைக் கொண்டு கணுக்கால்களை பிடித்து அழுத்துகிறாள்.
இதனால் பெருமாள் மற்றும் மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு சனியின் பாதிப்பு இருக்காது என்பது ஐதீகம். மேலும் சுக்கிரனின் ஆதிக்கம் அங்கு ஓங்கி இருப்பதால் அவர்களை வழிபாடு செய்பவர்களுக்கு கடன் தொல்லை இல்லாத ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும் என்று நம்பிக்கை.
இதனை கருத்தில் கொண்டு தான் பெருமாள் கோவிலுக்கு சென்றால் முதலில் தாயாரை வணங்கிவிட்டு பிறகு பெருமாள் சன்னதிக்கு சென்று அவரின் பாதங்களை தரிசித்து விட்டு பிறகு முகத்தை பார்த்து தரிசிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







