காதல் முதல் திருமணம் வரை பிரச்சனையை சந்திக்கும் தனுசு ராசியினர்.. காரணம் என்ன?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை உண்டு. அந்த வகையில், ஒன்பதாவது ராசியான தனுசு ராசியினர் குரு பகவானின் ஆதிக்கத்தை கொண்டவர்கள். இவர்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம். தனுசு ராசியை பொறுத்த வரை இவர்கள் எப்பொழுதும் சுதந்திரத்தை விரும்பக் கூடியவர்கள்.
அதேபோல், இவர்களை சுற்றியுள்ளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். யார் எவ்வாறு கஷ்டப்பட்டாலும் இவர்கள் அதை கண்டு கொள்வதில்லை.
இவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் சில நேரங்களில் சுயநலமாக எண்ணுவது உண்டு. இன்னும் சொல்லப்போனால் இந்த தனுசு ராசியில் பல நேரங்களில் சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வது உண்டு.

அதிலும் திருமண காலகட்டங்களில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஆதலால் இவர்கள் பொறுமையுடன் நல்ல புரிதலுடனும் வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்வது அவசியம். மேஷம் மற்றும் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் நல்ல பொருத்தமாக இருக்கக்கூடியவர்கள். ரிஷபம் மிதுனம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியினர் அவ்வளவாக பொருந்தாத ஒரு அமைப்பாக இருக்கிறார்கள்.
இவர்கள் திருமண வாழ்க்கையில் செல்லும் பொழுது நிச்சியமாக குலதெய்வத்தினுடைய பரிபூரண அருளையும் முன்னோர்கள் கடைபிடித்த சம்பிரதாயங்களையும் தவறாமல் பின்பற்றுவது அவசியம். மேலும், தனுசு ராசியினர் அவர்களுடைய காதல் முதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த காணொளியில் நாம் பார்த்த தெரிந்து கொள்வோம்