சிவன் ஏன் ஆபத்தான கடவுள் ? இது தெரியாமல் அவரை வழிபாடு செய்யாதீர்கள்
சிவபெருமான் என்றாலே அவரை அழிக்கும் கடவுள் என்று தான் முதலில் சொல்கிறார்கள். உண்மையில் சிவன் எதை அழிக்கிறார்? ஒரு மனிதனுடைய கர்ம வினைகளை அழிக்கிறார். ஒரு மனிதனுடைய பாவத்தை அழிக்கிறார். ஒரு மனிதனுடைய தீய செயல்களை அழிக்கிறார்.
ஆக, இவ்வாறு அவர் ஒரு மனிதரிடம் இருக்கக்கூடிய தேவையில்லாத விஷயங்களை அழிப்பதனால் தான் அவருக்கு அழிக்கும் கடவுள் என்று ஒரு பெயர் இருக்கிறது. அப்படியாக, அழிவு ஒரு இடத்தில் நடக்கும் பொழுது அங்கு நிச்சயம் சில பாதிப்புகள் இருக்கும்.
அதேபோல் தான் ஒரு மனிதனுக்கு அவனிடம் இருக்கக்கூடிய தீய விஷயங்கள் சிலவற்றை அழித்து அவனுக்கு மோட்சம் கொடுக்க வேண்டும் என்று சிவன் நினைத்து விட்டால் நிச்சயம் அந்த அழிவின் வழியாக கொடுக்கக்கூடிய பாடத்தில் அவன் நிறைய பாதிப்புகளை சந்திக்கும் நிலை வருகிறது. அதை தாங்கி கடந்து முன் வரும் பொழுது தான் அவன் தீயவற்றிடம் இருந்து விடுதலை பெறுவான்.

இருப்பினும் பக்கதர்களுக்கு எந்த இறைவன் ஆனந்தத்தை அருளி, ஆனந்த கண்ணீரை கொடுத்து அவனை நேசிக்க செய்தானோ! அதே இறைவன் துன்ப கண்ணீரை வடியச் செய்து விட்டானே என்று கோபத்தில் துடிக்கும்.
உண்மையில் மனிதனுக்கு அந்த நேரத்தில் துன்பம் என்பது அவன் ஆன்மா நீண்ட நாளுக்கு பழக்க பட்ட தீயதை விட முடியாமல் தவிக்கின்ற கண்ணீரே ஆகும்.
அதாவது மனிதர்களுக்கு ஒரு விஷயம் வசதியாக இருந்து விட்டால் அதை விட்டு விடுவதற்கு மனம் இருக்காது. மிகவும் சங்கடமாக எண்ணுவார்கள்.
ஆனால், முற்றும் துறந்த எம்பெருமானை இன்னும் இன்னும் பக்தர்கள் நெருங்கி செல்ல சமயங்களில் இப்படி ஒரு கடினமான பாடம் கொடுத்தாகவேண்டிய நிலை அவருக்கு இருக்கிறது.
அதனாலே எங்கே பக்தர்கள் அவர்களை செதுக்கும் பணியில் இருக்கும் வேளையில் துன்ப வலி தாங்க முடியாமல் அப்பனே! என்று அவரை அழைக்க நேர்ந்து, தன் பாசத்தால் அந்த பாடம் பாதியில் நின்று விடக்கூடாது என்றே சில நேரங்களில் கருணை கடல் எம்பெருமான் அவரின் உள்ளத்தை கல் ஆக்கி கொள்கிறார்.

இருப்பினும் எந்த கால சூழ்நிலைகளும் அவர் நம்மை கைவிடமாட்டார். தந்தை எவ்வாறு அன்பாகவும் கடினமாகவும் நடந்து கொள்கிறாரோ அதேபோல்தான் சிவபெருமான் அன்பாகவும் நடந்து கொள்வார், கடினமாக நடந்து கொண்டாலும் எப்பொழுது நம் அருகில் கவனித்தவாறு நமக்கான பாடங்களை கற்பித்து கொடுப்பார்.
இதைத்தான் மனிதர்கள் தவறாக புரிந்து கொண்டு அவர் ஆபத்தான கடவுள் என்று கோபத்தை அள்ளி தெளிக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அப்பன் அசைவது இல்லை. அவன் அறிவான் அவன் நடத்துவது அவன் பிள்ளையின் நன்மைக்காகவே என்று.
எவ்வாறு குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்கள் அன்பாக பேசும் பொழுது நல்ல பெற்றோர்கள் என்றும் சற்று கடினமாக நடந்து கொள்ளும் பொழுது எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று குழந்தை தனமாக சொல்லுகிறார்களோ!
அதே போல் தான் பக்தர்களும் சிவபெருமான் அன்பாக நடந்து கொள்ளும் பொழுது என்னுடைய தந்தை என்றும் அவர்களைத் திருத்தி நடத்துவதற்கு சற்று கடினமாக நடந்து கொள்ளும் பொழுது ஆபத்தான கடவுள் என்று ஒரு சிறிய கோபத்தினால் அவர்கள் சொல்லி விடுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |