இறந்தவர் உடலை ஏன் தனியாக வைக்கக்கூடாது?கருடபுராணம் சொல்வது என்ன?
இந்து சாஸ்திரத்தில் இறந்தவர் உடலை நாம் தனியாக விடமாட்டோம்.மேலும் இறந்த ஒருவரின் உடலை நாம் அருகில் அமர்ந்து பாதுகாக்க வேண்டியது நம் கடமை.அந்த வகையில் இறந்தவர் உடலை தனியாக விடக்கூடாது என்று கருட புராணம் சொல்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
ஒருவர் ஆரோக்கிய குறைபாட்டால் அல்லது வயது முதிர்வு காரணத்தால் இறக்கும் தருவாயில் இருந்தால் அவர்களை நாம் தனியாக விடக்கூடாது.கருட புராணம் படி ஒருவர் இறந்து அவர்களை தனியே விட்டால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து விடும்.
அதாவது தீய சக்திகள் உடலை தன் வச படுத்த முயலும்.மேலும்,இறந்த ஆன்மா தங்கள் உறவினர்கள் அழுவதை பார்த்து மீண்டும் தங்கள் உடலுக்குள் செல்ல முயற்சி செய்யும். மேலும் இறந்த உடல் தனியாக விட்டால் பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் வர அபாயம் உள்ளது.
இன்னும் மோசமான நிலையாக இறந்தவர் உடல் கிடைத்தால் அதை எடுத்து கெட்ட வழியில் உபயோகிக்க முயற்சிப்பார்கள்.
அதனால் இறந்த ஆன்மாவிற்கு மோட்சம் கிடைக்காது.அதோடு இறந்த உடலை ஒருவர் வீட்டில் நீண்ட நேரம் வைத்திருந்தால் அதில் பாக்டீரியா போன்ற நோய் கிருமிகள் உருவாகும்.ஈக்களும் பறக்க ஆரம்பிக்கும்.ஆதலால் கருட புராணத்தில் இறந்தவர்கள் உடலை தனியாக விட கூடாது என்று சொல்கின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |