காசி சென்று திரும்பும் பொழுது மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்
நம்முடைய இந்து மதத்தில் காசிக்கு செல்வது என்பது புனித யாத்திரையாக கருதப்படுகிறது.காசி சென்று வழிபாடு செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அப்படியாக நாம் ஏதெனும் புனித யாத்திரை மேற்கொள்ளும் பொழுது அங்கு இருக்கும் புனித நீரை வீட்டிற்கு எடுத்து வருவதுண்டு.
ஆனால் காசிக்கு சென்று வரும் பொழுது நாம் அங்கு இருந்து புனித நீரை எடுத்து வரக்கூடாது என்று சொல்லப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
காசியில் ஓடும் கங்கை நிதி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.ஒருவர் கங்கையில் நீராடும் பாக்கியம் பெறுவதே சிறந்த வாழ்க்கை பலனாக கருதப்படுகிறது.ஆக,கங்கை நதி உயிர் உள்ள ஆன்மாவையும்,உயிர் அற்ற ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது.
அதாவது காசியில் ஓடும் கங்காஜலம் ஆன்மா மோட்சத்தை அடைய உதவும் சக்தி கொண்டது.அதனால் தான் பல்வேறு நாடுகள்,ஊர்களில் இருந்து காசிக்கு சென்று புனித நீராடுகிறார்கள். இவ்வளவு புனிதமான கங்கா தீரத்தை மக்களை வீட்டிற்கு எடுத்து செல்வதில்லை.காசியில் உள்ள மணிகர்ணிகா படித்துறை இந்தியாவின் மிகவும் பிரபலமான தகனத் தலங்களில் ஒன்றாகும்.
இங்குத் தகனம் செய்யப்படுபவர்கள் மோட்சத்தை அடைவார்கள் என்று நம்பப்படுவதால், 24 மணி நேரமும் தகனச் சடங்குகள் செய்யப்படும் இடமாகவும் இது உள்ளது.தொடர்ச்சியான தகனங்களால் சாம்பல் மற்றும் பிற எச்சங்கள் கங்கை நதியில் விடப்படுகின்றன.
இது தண்ணீரை மாசுபடுத்தும் மற்றும் இறந்தவர்களின் சாரத்தை மக்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நிலைக்கு வழிவகுக்கும். எனவே, காசியிலிருந்து கங்காஜலை எடுத்து வருவதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |