60 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் அதிர்ஷ்டம்-நினைத்ததை சாதிக்க போகும் 3 ராசிகள்

By Sakthi Raj Feb 19, 2025 10:43 AM GMT
Report

சிவபெருமானுக்குரிய முக்கிய விஷேசமாக சிவராத்திரி இருக்கிறது.யார் ஒருவர் மஹசிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு சிவனின் அருளால் முக்தி கிடைக்கும்.அப்படியாக இந்த ஆண்டு மகாசிவராத்திரி பிப்ரவரி 26ஆம் தேதி அன்று வருகின்றது.அப்படியாக இந்த சிவராத்திரியில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அவிட்டம் நட்சத்திரத்தில் வருகின்றது.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று கும்ப ராசியில் சூரியன், புதன், சனி மற்றும் சந்திரன் போன்ற 4 முக்கிய கிரகங்களின் மகா சேர்க்கை நடைபெறுகிறது. சிவராத்திரியன்று உருவாகும் இந்த மாபெரும் ஜோதிட நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும் 3 ராசிகளுக்குச் சிறப்பான பலன்களை தருகிறது.அவை எந்த ராசி என்று பார்ப்போம்.

60 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் அதிர்ஷ்டம்-நினைத்ததை சாதிக்க போகும் 3 ராசிகள் | 3 Zodiac Sign Getting Luck After 60 Years

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.துரோகம் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் இறைவன் அருளால் மீண்டு வருவீர்கள்.சிலருக்கு நினைத்த வேலை கிடைக்கும்.பொருளாதாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும்.தொழில் செய்பவர்கள் அவர்கள் கடின உழைப்பால் லாபம் பெறுவீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மன அமைதியை கொடுக்கும்.செய்யும் வேலையில் வெற்றிகள் குவியும்.அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள்.பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்து வர உங்களுக்கு உண்டான துன்பம் எல்லாம் முற்றிலுமாக விலகும்.

கோட்டை முனீஸ்வரர் கோயிலில் காப்புக்கட்டி மாசி களரி திருவிழா தொடக்கம்

கோட்டை முனீஸ்வரர் கோயிலில் காப்புக்கட்டி மாசி களரி திருவிழா தொடக்கம்

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் அவர்கள் பல வருடம் காத்திருந்த வெற்றிகள் கிடைக்க போகிறது.ஒரு சிலருக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் கிடைக்கும்.பெற்றோர்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.பிள்ளைகள் உங்களுக்கு பெருமை சேர்த்து கொடுப்பார்கள்.திடீர் அதிர்ஷ்டத்தால் எதிர் பார்த்த நிலம் விற்கும்.       

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US