கோட்டை முனீஸ்வரர் கோயிலில் காப்புக்கட்டி மாசி களரி திருவிழா தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோட்டைமேடு கிராமத்தில் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோவில்.
இக்கோவிலில் 48ஆம் ஆண்டு மாசி களரி திருவிழாவானது இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இதற்கு முன்னதாக மூலவர் கோட்டை முனீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், ஜவ்வாது, இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
மேலும், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதையடுத்து, மாசிகளரி திருவிழாவிற்கு கோவிலில் காப்பு கட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |