திறமை அறிவு இருந்தும் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் முன்னேற விடாத கர்மா இருக்குமாம்

By Sakthi Raj Oct 16, 2026 07:47 AM GMT
Report

சில நேரங்களில் நாம் எவ்வளவு உழைத்தாலும் அதற்கேற்ற பலன் இருக்காது. கடினமாக உழைப்பு போட்டு இருப்போம், அதிக அளவில் அறிவும் ஞானமும் நம்மிடம் இருப்பதை நம்மால் உணர முடியும்.

நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய நபர்களை பார்க்கின்ற பொழுது அவர்களை விட நாம் தனித்துவமாகவே இருந்தாலும் நமக்கான வளர்ச்சியும் அங்கீகாரமும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை.

உங்களைச் சுற்றி நடப்பதை முன்கூட்டியே உணர்கிறீர்களா? இதுதான் ஆன்மிக ரகசியம்

உங்களைச் சுற்றி நடப்பதை முன்கூட்டியே உணர்கிறீர்களா? இதுதான் ஆன்மிக ரகசியம்

இதற்கான காரணம் என்று எடுத்து பார்க்கின்ற பொழுது ஜோதிட ரீதியாக ஒரு சில விஷயங்கள் சொல்லப்படுகிறது. அதாவது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் எல்லாம் தடைப்படும். வாய்ப்புகள் நெருங்கி வந்த நேரத்தில் தட்டிப் போகும்.

திறமை அறிவு இருந்தும் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் முன்னேற விடாத கர்மா இருக்குமாம் | Why Some Dont Get Success According Horoscope

யாருக்கு உதவுகின்றோமோ அவர்களே நமக்கு எதிர்பாராத துரோகிகளாகவும் எதிரிகளாகவும் நடப்பார்கள்.

இதற்கெல்லாம் ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி வக்கிரம் பெற்று லக்னத்திற்கு ஐந்தாம் அல்லது ஒன்பதாம் அதிபதியுடன் ராகு கேது பாதகாதிபதி தொடர்பு பெற்று நின்றால் அந்த ஜாதகருக்கு இவ்வாறான கஷ்டங்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

உண்மையில் யார் துறவி? புத்தரின் வாழ்க்கை உணர்த்தும் ஆழமான பாடம்!

உண்மையில் யார் துறவி? புத்தரின் வாழ்க்கை உணர்த்தும் ஆழமான பாடம்!

இவ்வாறு அமைப்புகள் இருக்கின்ற பொழுது அவர்கள் சரியான பித்ரு கடமைகளை செய்ய வேண்டும்.

அவர்களுடைய முன்னோர்களை மகிழ்விக்க கூடிய விஷயங்களை தொடர்ந்து செய்கின்ற பொழுது இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து அவர்கள் விடுபடலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US