தவறியும் துளசியை மென்று சாப்பிடாதீர்கள்- காரணம் இதோ
துளசி என்பது ஆன்மீக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் நமக்கு நிறைய நற்பலன்களை கொடுக்கக் கூடியது. ஒருவர் தொடர்ந்து துளசி தேவிக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் அவர்களுக்கு கடன் தொல்லை எல்லாம் விலகி பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவார்கள்.
அப்படியாக பல்வேறு சிறப்புகளை கொண்ட துளசி செடியை வீட்டில் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். நம் இந்து மதத்தில் துளசி தேவியை மகாலட்சுமி அம்சமாக போற்றி வழிபாடு செய்து வருகின்றோம்.
அதனால் துளசி இலைகள் ஒவ்வொன்றையும் நாம் இறைவனுக்கு நிகராக வைத்து வழிபாடு செய்கின்றோம். ஆதலால், நாம் எப்பொழுதும் வீடுகளில் துளசி செடி இருக்கிறதே என்று சாதாரணமாக பறித்து உண்பதை தவிர்க்க வேண்டும்.

ஆன்மீக ரீதியாக துளசி இலைகளை நாம் வெறுமனே பறித்து மெல்வது என்பது துளசி தேவியை அவமதிப்பதற்கு சமமாக பார்க்கப்படுகிறது. இதைத்தான் மருத்துவ ரீதியாகவும் சொல்கிறார்கள். அதாவது துளசி செடியை நாம் வெறுமனே உண்ணும் பொழுது பற்களில் இருக்கக்கூடிய ஈறுகளில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம்.
மேலும் மருத்துவ ரீதியாக கட்டாயமாக துளசி இலைஒருவருடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதோடு அவர்களுக்கு ஏற்படக்கூடிய சளி மற்றும் இருமலை குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
ஆனால் அதை நாம் இலைகளாக பறித்து உண்பதைக் காட்டிலும் தண்ணீரில் வேகவைத்து அந்த தண்ணீரை குடிப்பது நல்லது என்று சொல்கிறார்கள். முடிந்தவர்கள் மாலை நேரங்களில் அல்லது காலை நேரங்களில் தேநீரில் துளசி இலையை போட்டு குடித்து வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |