இந்த 3 ராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்
ஒவ்வொரு ராசியும் ஒரு விதமான பலன்களை கொடுக்கிறது. அப்படியாக ஒவ்வொரு ராசியில் பிறந்த ஆண் பெண் எல்லோரும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் என்றாலும் ஒரு சிலர் ராசியில் பிறந்த பெண்கள் அவர்கள் கடின உழைப்பாலும் அதீத அன்பாலும் அந்த கணவனுடைய குடும்பத்தினரை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வார்களாம்.
அந்த ராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் பொழுது திருமணத்திற்கு பிறகு அந்த கணவன் அதிர்ஷ்டசாலியாகவும் செல்வ செழிப்பாகவும் வாழக்கூடிய யோகம் பெறுகிறார்கள். அவர்கள் எந்த ராசியில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் தங்களுடைய பிறந்த வீட்டை விடவும் புகுந்து வீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களுக்காக கடின உழைப்புகளை போடுவார்கள். ஆதலால் அந்த குடும்பம் இவர்கள் சென்ற பிறகு மிக உயர்ந்த இடத்திற்கு செல்கிறார்கள்.
கன்னி:
கன்னி ராசியை பொறுத்தவரை இவர்கள் பிறந்து வீட்டை விட புகுந்த வீட்டிற்கு தான் அதிக அன்பும் பாசமும் கொடுப்பார்கள். மேலும் கணவனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத ஒரு நபராகவும் இருக்கிறார்கள். கடவுளுக்காக எதையும் செய்ய துணிகிறார்கள். ஆதலால் இவர்கள் திருமணம் செய்யும் ஆண் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார்.
மீனம்:
மீன ராசியில் பிறந்த பெண்கள் விவேகமாக செயல்பட கூடியவர்கள். அதிலும் கணவன் வீட்டிற்கு இவர்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்காக நிறைய விஷயங்களை இவர்கள் முன்வந்து செய்கிறார்கள். இவர்கள் விட்டுக்கொடுத்து செல்லக்கூடிய பக்குவம் அதிகம் இருப்பதால் இவர்களை திருமணம் செய்யும் கணவன் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார்.