இந்த தேதியில் பிறந்த பெண்கள் மிகவும் விஷேசமானவர்களாம்.. உங்கள் தேதி உள்ளதா?
ஜோதிட ரீதியாக எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது எண் கணிதத்தை கொண்டும் நாம் ஒருவருடைய வாழ்க்கை முறை அவர்களுடைய குண நலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். அப்படியாக குறிப்பிட்ட சில தேதியில் பிறந்த பெண்கள் ரொம்ப விசேஷமானவர்களாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
எந்த மாதத்திலும் எண் இரண்டு என்கின்ற தேதியில் பிறந்த பெண்கள் மிகவும் மென்மையானவர்களாம். காரணம் சந்திரனின் ஆதிக்கத்தை பெற்றதால் இவர்கள் மற்றவர்களுடைய வலியை புரிந்து கொண்டு நடந்து கொள்ளக் கூடியவர்களாம். இவர்களிடம் நாம் ஒரு விஷயத்தை சொன்னால் அதை எந்த சூழ்நிலையிலும் அவர்கள் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

பிறகு எந்த மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தை கொண்டவர்கள் என்பதால் இவர்கள் அதிக கவர்ச்சியோடு இருப்பார்களாம். ஒருவரை மிக எளிதாக தன்னுடைய நண்பர்களாக மாற்றிக்கொள்ளக்கூடிய திறமை இவர்களிடம் இருக்குமாம். அதேபோல், எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதை இந்த பெண்கள் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேதியில் பிறந்த பெண்கள் கலை ரசனோடு இருப்பார்கள். அதனால் இவர்கள் கலைத்துறையில் அதிக அளவில் சாதனை படைக்க கூடியவர்களாகவும் உள்ளார்கள். பிறகு எந்த மாதத்திலும் 11 மற்றும் 29ஆம் தேதியில் பிறந்தவர்கள் தலைமைத்துவ பண்பில் சிறந்து விளங்குவார்களாம். இவர்களிடத்தில் ஆன்மீக சிந்தனை அதிகம் இருக்கும்.
எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை அவர்கள் எளிதாக கையாளக்கூடிய பக்குவத்தை இவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் எந்த உறவுகளாக இருந்தாலும் அந்த உறவுக்கு மதிப்பு கொடுத்து நன்றி உணர்வோடு வாழக் கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |