சனிபகவானுக்கு இவர்களைத்தான் மிகவும் பிடிக்குமாம்.. எந்த தீங்கும் செய்ய மாட்டாராம்
நவகிரகங்களில் சனி பகவான் கர்ம காரகனாக இருக்கிறார். இவருடைய அருளை பெறுவது என்பது மிகவும் கடினமான காரியம். காரணம் நல்ல ஒழுக்கமும் பண்பும் குணமும் கொண்டவர்களுக்கு தான் சனி பகவானுடைய அருள் அதிகம் கிடைக்கும்.
மேலும், சனிபகவானை பார்த்தாலே எல்லோரும் அஞ்சுவார்கள். காரணம் மனிதர்களுடைய வாழ்க்கையில் நாம் தெரிந்தும் தெரியாமலும் சில நேரங்களில் சில தவறுகளை செய்வது உண்டு. ஆனால், சனி பகவான் என்பவர் ஒரு மனிதனுடைய செயலில் துவங்கி சிந்தனைகள் வரை அவர்களை உண்ணிப்பாக கவர்ந்து அதற்குரிய நன்மை தீமைகள் வழங்க கூடியவராக இருக்கிறார்.
ஆதலால், நம்மை அறியாமல் தவறு செய்திருப்போம். சனி பகவான் நம்மை பாதித்து விடுவாரோ என்கின்ற பயம் எல்லோருக்கும் வரும். அப்படியாக, சனி பகவானுக்கு ஒரு சில மனிதர்களை மிகவும் பிடிக்கும். அவரை சனி பகவான் எதுவும் செய்ய மாட்டாராம். அவர் யார் என்று பார்ப்போம்.

எந்த ஒரு மனிதன் எதன் மீதும் அதிகம் பற்று இல்லாமல் ஆசை கொள்ளலாம் எல்லோரையும் மதித்து சக உயிர்களையும் தன்னை போல் நினைத்து அவர்களுடைய துயரத்தை தனது துயரம் போல் தாங்கி நன்மை செய்து வருகிறார்களோ அவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்குமாம்.
எவ்வளவு பெரிய இக்கட்டான நிலை வந்தாலும் சனி பகவான் அவர்களை இறுதி நொடியில் காப்பாற்றி மிக உயரத்திற்கு கொண்டு சென்று விடுவாராம். இந்த குணம் படைத்த எல்லோருக்கும் சனி பகவான் ஒரு பாதுகாவலராக இருக்கிறார்.
அதை போல் இந்த நபர்களிடம் யாராவது துன்பம் செய்தாலும் அவர்களுக்கும் தக்க தண்டனையை வழங்க கூடியவராக இருக்கிறார். ஆக, இந்த உலகத்தில் நல்லவராக நல்ல மனிதராக வாழ்ந்து விட்டால் நாம் யாரையும் நாடிச் செல்ல வேண்டாம். கிரகங்களே நம்மை தேடி வந்து ஆசீர்வாதம் செய்யும்.