பெண்கள் தங்க கொலுசு, தங்க மெட்டி அணியக்கூடாது: ஏன் தெரியுமா?
புன்னகையும், பொன் நகையும் பெண்களுக்கு எப்பொழுதும் ஒரு தனி அழகை ஏற்படுத்தும்.
அந்தவகையில், பெண்கள் அணியும் கொலுசும், திருமணமான பெண்கள் கால்களில் போடும் மெட்டி ஒலியும், கேட்கவே ஆனந்தமாக இருக்கும்.
அண்மைக்காலங்களாக தங்கத்தில் கொலுசு அணிவது அதிகரித்து வருகிறது.
வாழ்க்கையில், கோடீஸ்வரராக இருந்தாலும் தங்கத்தில் கொலுசு அணியக் கூடாது என்று சாஸ்திரங்களும் சொல்கின்றன.
ஜோதிட ரீதியில், கால் என்பது சனி பகவானின் அம்சம் ஆகும். தங்கம் என்பது குருபகவானின் அம்சம். வயிறு பகுதிகள்தான் குருவிற்கான அம்சமாகும்.
இதனால்தான் தங்கத்தில் திருமாங்கல்யம், செயின், நெக்லஸ், ஒட்டியாணம் உள்ளிட்டவைகளை அணிகிறோம்.
குருவின் ஆதிக்கம் கொண்ட தங்கம், மகாலட்சுமியின் அம்சம் ஆகும். தங்கத்தை அணிவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
இதனால் தங்கத்தை காலுக்கு கீழ் அணிவதை தவிர்க்க வேண்டும் என சொல்கிறார்கள் முன்னோர்கள்.
தங்கத்தை கால்களில் அணிவது பாவம் என்கிறார்கள். அவ்வாறு அணிவது மகாலட்சுமியான தங்கத்தை அவமதிக்கும் செயல் என சொல்கிறார்கள்.
எனவே தங்க கொலுசு, தங்க மெட்டி அணிவதால் நமக்கு நன்மையை காட்டிலும் தீமையே அதிகமாக உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |