தை அமாவாசை 2025:வீட்டில் பெண்கள் என்ன செய்யலாம்?என்ன செய்யக்கூடாது?
தமிழ் மாதங்களில் தை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும்.இந்த மாதத்தில் தான் பல முக்கியமான நிகழ்வுகள் வரும்.அப்படியாக தை மாதத்தில் வரும் தை அமாவாசை மிக முக்கியமான நாள் ஆகும்.அன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது போன்ற விஷயங்கள் நாம் செய்வதற்குரிய முக்கியமான நாளாகும்.
காட்டாயம் நெருங்கிய சொந்தங்களை இழந்த குடும்பத்தினர் இறந்தவர்களுக்கான கடமையை செய்ய வேண்டும்.அப்பொழுது தான் அவர்கள் குடும்பத்தில் வளர்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.அந்த வகையில் நம்முடைய வீட்டில் தை அமாவாசை அன்று பெண்கள் என்ன செய்யவேண்டும்?என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
தை அமாவாசையில் பெண்கள் செய்யக் கூடாதவைகள்:
பொதுவாக வீட்டில் உள்ள சொந்தங்கள் இறந்தால் ஆண்கள் தான் விரதம் இருந்து இறந்த தன்னுடைய தாய்,தந்தையருக்கு தர்ப்பணம் செய்வார்கள்.ஆனால் அந்த சமையத்தில் பெண்கள் விரதம் இருக்கக்கூடாது.
மேலும்,ஒரு பொழுதும் திருமணம் ஆன பெண்கள் அவர்களின் இறந்த சொந்தங்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடாது.ஒருவேளை அப்படி செய்தாலும் அது உயிருடன் இருக்கும் கணவர் குடும்பத்தில் இருப்பவர்களை மட்டுமே சேரும்.மறைந்த தாய் வீட்டு உறவுகளின் ஆன்மாக்களை சென்றடையாது.
தை அமாவசை அன்று அவர்கள் வீட்டில் கோலம் போடுவதோ,அன்றைய தினம் விளக்கு தேய்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
அதே போல் மறந்தும் அன்றைய தினத்தில் வீட்டில் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
பெண்கள் செய்ய வேண்டியவை:
தை அமாவாசை விரதத்திற்கு சமைக்கும் போது மொத்தமாக 1008 வகையிலான எண்ணிக்கையில் சமைக்க வேண்டும்.அதவாது வாழைக்காய், பாகற்காய், பிரண்டை,பலாக்காய் ஆகிய நான்கையோ அல்லது ஏதாவது ஒன்று, இரண்டையாவது சமைக்க வேண்டும். இந்த நான்கு காய்கறிகளை சமைத்தால் 1008 காய்கறிகளை சமைத்த பலன் கிடைக்கும்.
கணவரை இழந்த பெண்களாக இருந்தால் இறந்த தன்னுடைய கணவர், தாய், தந்தை ஆகியோருக்காக பட்டினியாக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
மேலும்,வீட்டில் விரதம் இருக்கும் ஆண்கள் சாப்பிட பிறகு தான் வீட்டில் உள்ள பெண்கள் சாப்பிட வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |