ஏழரை சனி யாருக்கு அதிக பாதிப்பு கொடுக்கும்.. யார் ராஜயோகம் அனுபவிக்கப் போகிறார்கள்
சனிபகவான் என்றாலே கர்ம காரகன் என்று நாம் சொல்வதுண்டு. அந்த வகையில், ஏழரை சனி எந்த ராசிகளுக்கு அதிக பாதிப்பை கொடுக்கும் என்று பார்ப்போம்.
கும்பம்:
இவர்களுக்கு பாத சனி மூன்றாம் கட்டத்தில் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்பை கொடுக்கலாம். மருத்துவ செலவுகள் உண்டாகும். கவனமாக இருப்பது அவசியம்.
மீனம்:
இவர்களுக்கு ஜென்ம சனி நிறைவு கட்டமாக இருக்கிறது. தொழில் நிலையில் ஒரு மந்த நிலை காணப்படும். எவ்வளவு முயற்சி செய்தாலும் தோல்வி உண்டாகும். புத்தி கூர்மையோடு செயல்பட்டால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம்.

மேஷம்:
இவர்களுக்கு விரைய சனி ஆரம்ப கட்டம். வரவு ஒரு மடங்கு இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளையும் சந்திப்பீர்கள். சுப காரிய செலவு செய்தால் விரய சனியை ஜெயித்து விடலாம்.
சனியால் ராஜயோகத்தை அனுபவிக்க கூடிய அதிர்ஷ்ட ராசிகளில் ரிஷபம், மகரம், விருச்சிகம், கன்னி, சிம்மம், தனுசு உள்ளார்கள். இவர்கள் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
வரும் வரவை சரியாக கையாள தெரிந்து கொண்டால் ஜெயித்து விடலாம். துலாம், கடகம், மிதுனம் ஆகிய மூன்று ராசிகளுக்கும் நல்லது கெட்டது என எல்லா விஷயங்களையும் சரிசமமாக பார்த்து கொடுப்பார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |