பூஜை செய்யும் பொழுது இந்த 5 விஷயங்களை தவறியும் செய்து விடாதீர்கள்

By Sakthi Raj Oct 30, 2026 10:45 AM GMT
Report

தினமும் வீடுகளில் பூஜை செய்து இறை வழிபாடு செய்வது வழக்கம். இவை நமக்கு ஒரு மன நிம்மதியையும் அமைதியையும் கொடுப்பதோடு வீடுகளிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை விலக்கி நமக்கு ஒரு நேர்மறை சக்தியை கொண்டு வந்து சேர்க்கிறது.

அப்படியாக, பூஜை செய்யும் பொழுது சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது பூஜை செய்வதற்கான சில வழிமுறைகள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

வீட்டில் பணம் தங்க வேண்டுமா? கடைபிடிக்க வேண்டிய 10 பரிகாரங்கள்

வீட்டில் பணம் தங்க வேண்டுமா? கடைபிடிக்க வேண்டிய 10 பரிகாரங்கள்

நம் வீடுகளில் பூஜை செய்யும் பொழுது கற்பூர தீபம் காண்பித்து பூஜை செய்வது வழக்கம். அப்படியாக, அந்த கற்பூரத்தை நாம் தானாகவே குளிர வைக்க வேண்டுமே தவிர நம் வாய்களால் ஊதியோ தண்ணீரைக் கொண்டு அணைக்க கூடாது.

பூஜை செய்யும் பொழுது இந்த 5 விஷயங்களை தவறியும் செய்து விடாதீர்கள் | 5 Things We Shouldnt Do While Doing Poojas

அதேபோல், விபூதி பூசிக்கொள்ளும் பொழுது கண்ணாடியை பார்த்து பூசக்கூடாது. வீடுகளில் விளக்கேற்றும் பொழுது ஒரு ஒற்றை விளக்கை மட்டும் நாம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.

ஆன்மீக சாஸ்திரத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஆற்றைக் கடந்து வந்து அருள் பாலித்த தெய்யம்.. பக்தி பரவசத்தில் ஆழ்ந்த கேரள மக்கள்

ஆற்றைக் கடந்து வந்து அருள் பாலித்த தெய்யம்.. பக்தி பரவசத்தில் ஆழ்ந்த கேரள மக்கள்

இந்த நாட்களில் நிலை வாசலில் பன்னீருடன் மஞ்சள் கலந்து பூசினால் குலதெய்வத்துடைய அருளும் மகாலட்சுமி பரிபூரண அருளையும் நாம் பெற முடியும்.

அதேபோல், எந்த நிலையிலும் தெய்வங்களை நேருக்கு நேராக நின்று வழிபாடு செய்யக்கூடாது. சற்று ஓரமாக நின்று தான் நாம் வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US